தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

குத்தாலம்: மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவின் போது ஆதீன திருமடத்தின் 4 வீதிகளில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்நிலையில், விழாவின் முக்கியமான பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து, விடியற்காலை 4 மணி வரை நடந்த நிகழ்ச்சியில்  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை சுமார் 70 பேர் சிவிகை பல்லக்கில் தூக்கிச் சென்றனர்.   அப்போது ஆதீனத்தைச் … Read more

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணம் மேற்கொண்டார்.  இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று இரவு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். தூதரக அதிகாரிகள் உள்பட பலர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.   டோக்கியோ சென்றுள்ள … Read more

கொல்கத்தாவில் பரபரப்பு – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்.பி.

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் பாரக்புரா தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த அர்ஜூன் சிங். இவர் முதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு அர்ஜுன் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பின், அவர் பாரக்புரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.யான அர்ஜூன் சிங் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தேசிய … Read more

கடைசி கட்டத்தில் அதிரடி – பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி

லண்டன்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். நடப்பு சீசனுக்கான ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. தொடக்கம் முதல் ஆஸ்டன் அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 2-0 என ஆஸ்டன் வில்லை முன்னிலை … Read more

கேரளா, ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மகாராஷ்டிரா

மும்பை: பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது. இதற்கிடையே, முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.2.41-ம், டீசல் மீதான வாட் வரியை ரூ.1.36-ம் குறைப்பதாக அறிவித்தது. கேரளாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் பெட்ரோல் மீதான வாட் … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியா உடனான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி

23.5.2022 00.30: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்கு ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை மூலம்தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

காஞ்சிபுரம், திருவள்ளூரில் அதிக மழைக்கு வாய்ப்பு- வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு

கோவை: தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின், 9 மாவட்டங்களில் சராசரி மழையளவை விட அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காலத்துக்கான மழை குறித்த முன்னறிவிப்பு வெளியிட, வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் பயிர் மேலாண்மை … Read more

கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய கரீபியன் நாடுகளுக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முதலில் ஜமைக்கா சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அந்நாட்டு பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரில் உரையாற்றினார். இதன்மூலம் ஜமைக்கா சென்ற … Read more

லிவிங்ஸ்டோன் அதிரடி – 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது பஞ்சாப்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 43 ரன்னும், ஷெப்பர்ட் 26 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் சார்பில் நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார் … Read more

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வாங்கடே  மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பில் 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 32 பந்துகளில் இரண்டு 6, 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை சேர்த்தார். … Read more