தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள்- மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் தமிழிசை

சென்னை: தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:- மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் (ESIC)அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது ஓர் மருத்துவராக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மருத்துவமனையும் சுமார் 5 ஏக்கரில் 155 கோடியில் அதி நவீன வசதிகளுடன் 100 படுக்கைகளுடன் அமைய உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி போன்ற தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களுக்கு அருகாமையிலேயே அதி நவீன வசதிகளுடன்  … Read more

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 6-வது நபரின் உடல் மீட்பு

நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் முருகன், விஜயன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம் என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். பாறை இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6-வது நபரான ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் … Read more

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்- 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை நாய்கள் சில துரத்தியுள்ளது. இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கு சாக்கு பையால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கினான். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் சிறுவனனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி

தமிழகம் சார்பில் கப்பலில் அனுப்பப்பட்ட பால் பவுடர், அரிசி, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை சென்றடைந்தது. இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உள்பட 2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்து சேர்ந்தது. இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், … Read more

டி-20 கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். டி- 20 இந்திய அணியில் ருத்துராஜ் கைக்வாண்ட், ரிஷப் பந்த் (துணை கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர்,  ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ரவி பிஷ்னோய், புவேனஸ்வர் … Read more

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்

புதுடெல்லி:  ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்கு பிரதமர் மோடி, நாளை முதல் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.  இதற்காக டெல்லியில் இருந்து இன்று தனி விமானம் மூலம் அவர் டோக்கியோ புறப்பட்டுச் செல்கிறார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இடம் பெற்றுள்ள குவாட் அமைப்பின் 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.  தமது டோக்கியோ பயணத்தின் போது, இந்தியா-ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் … Read more

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு

கொழும்பு: இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 19 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவால் … Read more

மண் காப்போம் இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து

கோவை: மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் – மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இவை தான் நம் வாழ்வை முடிவு செய்கிறது. தண்ணீர் மற்றும் காற்றின் தரத்தை மண் தான் தீர்மானிக்கின்றது. எனவே, மண்ணை வளமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். … Read more

குரூப் 2 தேர்வு விடைகுறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது. மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும், குரூப் 2, 2ஏவில் தவறான கேள்விள் இடம் பெற்றிருந்ததாக தகவல் … Read more