2 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டம் அலைமோதல்- திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமாகிறது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. தொற்று பரவல் குறைந்ததைடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசனம் மற்றும் இலவச தரிசனத்தில் படிப்படியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். … Read more

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு- ஏஐசிடிஇ

பொறியியல் படிப்பு கட்டணம் மற்றும் பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.79,600 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பி.இ., பி.டெக், பி.ஆர்க். படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சம் ரூ.1,89,800ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க். படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.1,41,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.34 லட்சம் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான … Read more

திருப்பதி அலிபிரி நடைபாதையில் படையெடுக்கும் பாம்புகள்- பக்தர்களுக்கு எச்சரிக்கை

திருப்பதி: திருப்பதி அலிபிரி நடைபாதையில் கூர்க்கா கொட்டகை பகுதியில் நேற்று முன்தினம் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது. பாம்பைப் பார்த்ததும் பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள்அலறியடித்து ஓடினர். இதுகுறித்து பாம்பு பிடிக்கும் தேவஸ்தான ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டார். அப்போது நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். இதேபோல் திருப்பதியில் ரூயா மருத்துவமனையில் எலும்பு … Read more

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன- 85 சதவீதம் பேர் ஆதரவு

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி உள்ளன. என்பது பற்றி சிவோட்டர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டடுள்ளது. அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் இந்த கருத்து கணிப்பு நடைபெற்றது. இந்த கருத்துக்கணிப்பில் தென் மாநிலங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபலமான தலைவராக உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 85 சதவீதம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாகவும், அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 51 சதவீதம் பேர் திருப்தி என்று … Read more

நாய்கள் துரத்தியதால் விபரீதம் – ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன்

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை வெறிப்பிடித்த நாய்கள் சில துரத்தியுள்ளது. இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கிருந்த ஓடியுள்ளான். அங்கு ஆழ்துளைக் கிணறி ஒன்று சாணல் பையால் மூடியிருப்பதை கவனிக்காமல் அதில் கால் வைத்து உள்ளே விழுந்தான். சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் … Read more

ஊட்டியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்

கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் அரசு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ந் தேதி இரவு கோவை வந்தார். கோவையில் தங்கி ஓய்வெடுத்த அவர் மறுநாள் 19ந் தேதி காலை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஒராண்டு சாதனை ஒவிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். … Read more

உ.பியில் கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து: 8 பேர் பலி- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷிவ்நகரில் உள்ள மஹூவாரா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றுவிட்டு 11 பேர் காரில் மஹ்லா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஜோகியா உதய்பூர் பகுதியில் உள்ள  கத்யா கிராமம் அருகே அதிகாலை 1 மணியளவில் கார் எதிரே சென்ற லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 … Read more

உயரமான, செங்குத்தாக காணப்படும் வெள்ளிங்கிரி மலை ஏறிய அமைச்சர் சேகர்பாபு

வடவள்ளி: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். சாமியை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஜனவரி முதல் வாரத்திலிருந்து மே இறுதி வாரம் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று … Read more

தேசிய அரசியலில் தீவிரம் காட்டும் சந்திரசேகர ராவ்: பஞ்சாப் விவசாயிகளுடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி:  தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக மத்தியில் காங்கிரஸ் அல்லாத எதிர்க் கட்சிகளின்கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.  இதன் ஒரு பகுதியாக நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதயுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராவ், தொடர்ச்சியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.   அங்குள்ள டெல்லி அரசு பள்ளி ஒன்றை பார்வையிட்டார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் விவசாய சட்டங்களை … Read more

எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணியை பிரதமர் மோடி 26ந் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிரமாண்ட நுழைவு வாயில் சென்னையின் 2வது பெரிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரெயில் நிலையத்தை உலகத்தரத்துடன் நவீன மயமாக்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. ரூ.760 கோடி மதிப்பில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. எழும்பூர் ரெயில் நிலையத்தின் 2வது நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த 2வது நுழைவு வாயில் பிரதான நுழைவு வாயிலாக தெற்கு ரெயில்வே மறு வடிவமைக்க உள்ளது. ரெயில் நிலையத்தில் … Read more