இந்திய பேட்மிண்டன் அணியினருக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு

புதுடெல்லி: தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது. வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சந்தித்தனர். இதேபோல் உபேர் கோப்பையை வென்ற இந்திய மகளிர் பேட்மிண்டன் வீராங்கனைகளும் பிரதமரை சந்தித்தனர். அப்போது பேசிய … Read more

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.க்களின் 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் 34 பேர் அமைச்சர் பதவி வகித்து வருகிறார்கள். தி.மு.க. அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்று சமீபத்தில் ஓராண்டு நிறைவு பெற்றது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்காக அவர் … Read more

இந்தியாவில் புதிதாக 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 371 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 65 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட … Read more

கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி… 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

மான்ட்ரியல்: கனடாவின் கிழக்கு மாகாணங்களான  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.  இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 

குரங்கு அம்மை நோய் கண், காது, மூக்கு வழியாக பரவும்

குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது. குரங்கு அம்மை வைரசால் குரங்கு அம்மைத் தொற்று ஏற்படுகிறது. பெரியம்மை போன்ற வகையைச் சேர்ந்தது. பொதுவாக இது தீவிரத்தன்மை இல்லாதது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாக காணப்படும் இந்த வைரஸ் … Read more

பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியை குறைக்க வேண்டும்-ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: மத்திய அரசு நேற்று கலால் வரியை குறைத்தது. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம் குறைக்கப்படுள்ளது. உஜாலா திட்ட கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு … Read more

தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் தருணத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பணவீக்கத்தைக் குறைக்கும் … Read more

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள்- அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சிதம்பரம்: தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள தமிழ்நாடு உணவு வாணிப கழக குடோனில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் ரேஷன் உணவு பொருட்கள் கடத்துவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறுப்பேற்ற பின்பு சிவில் சப்ளை பிரிவில் தற்போது 4 சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 286 குடோன்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்கூரை, தரை, ஓய்வு அறைகள் … Read more

உர விலை உயர்வில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கூடுதல் மானியம்- மத்திய நிதி மந்திரி தகவல்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி குறைப்பை அறிவித்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் 1கோடியே 10 லட்சம் கோடியாக அதிகரிக்கப் படுவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய பட்ஜெட்டில் உர மானியம் ரூ.1.05 லட்சம் கோடி கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றில் தொற்றுநோயிலிருந்து உலகம் மீண்டு வரும் நேரத்தில், உக்ரைன் ரஷியா மோதல், விநியோகச் … Read more

வெளிநாட்டு மண்ணில் பிரதமரை விமர்சிப்பதா?- ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பாய்ச்சல்

புதுடெல்லி: இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்தது. இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பால் இந்தியாவுக்கு ராகுல் காந்தி தீங்கு செய்கிறார். வெளிநாட்டு மண்ணில் நாட்டை பற்றி அவர் அடிக்கடி விமர்சிப்பது, நாட்டை காட்டிக்கொடுப்பதாகும்” என சாடினார். ராகுல் காந்தி இந்திய வெளியுறவு சேவை பற்றி கருத்து தெரிவிக்கையில், “நான் … Read more