கேரளாவை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: எரிபொருள் விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று குறைத்தது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு  8.22 ரூபாய் குறைந்து 102.63 காசுகளுக்கும், டீசல் 6.70 ரூபாய் குறைந்து 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா … Read more

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்- உலக சுகாதார அமைப்பு ஆலோசனை

ஜூரிச்: உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்துகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக் கூறுகையில், “37 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவித்தார். உலக … Read more

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமல் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.  137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.   இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்கா … Read more

தேர்தலில் வெற்றி பெற்ற அந்தோனி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசனை வீழ்த்தி தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி ஆல்பனீஸ் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட அந்தோனி அல்பானீஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் … Read more

சலுகை விலையில் கச்சா எண்ணெய் – இந்தியாவை மீண்டும் புகழ்ந்த இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரஷியாவிடம் பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இந்தியாவும் மலிவு விலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் … Read more

டெல்லியை பழிக்கு பழிவாங்கிய மும்பை – 4 ஆண்டுக்கு பிறகு நடந்த சுவாரசியம்

மும்பை: மும்பையில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெறும் 4-வது வெற்றி ஆகும். மும்பைஅணி வெற்றி பெற்றதால், டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை

தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு இன்று நடந்தது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது. குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் பெண்கள். 48 பேர் மூன்றாம் … Read more

மக்களை முட்டாளாக்காதீர்கள் – பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் மத்திய அரசை சாடிய காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டரில், மத்தியில் … Read more

ராஜீவ் கொலை வழக்கு: சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

உதகை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது.  ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் கால நீண்டகாலம் தாமதம் செய்தார். இதனை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் … Read more

ஜம்மு காஷ்மீர் சுரங்க விபத்து- 9 உடல்கள் மீட்பு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர்  மாநிலம் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது.  கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியானது திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர். மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், இன்று மீண்டும் மீட்புப்பணிகள் … Read more