கேரளாவில் மீண்டும் பரவுகிறது- பறவை காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக சுகாதார துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாநில சுகாதார துறையினர் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்குள்ள பறவை பண்ணைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அதோடு நோய் பாதித்த பறவைகள் உள்ளனவா? என கால்நடை துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது ஆன இரட்டை … Read more

உலக சுற்றுச்சூழல் தினம்- மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மண் வளப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர் முதல் செங்கப்பட்டு வரை 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. கோவை மற்றும் சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமும், மதுரை, நாகர்கோவில், ஈரோடு, நாமக்கல், … Read more

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

சீனர்களுக்கு விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது … Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து நேற்று பாதிப்பு எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை … Read more

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் தாக்குதல்- செங்கல் சூளை தொழிலாளி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த ஒருமாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றி வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றும் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. 31-ந்தேதி ரஜனிபாலா என்ற பண்டிட் ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்தொடர்ச்சியாக நேற்று குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கிக்குள் புகுந்து மேலாளர் விஜயகுமார் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் … Read more

சொத்து வரியை உயர்த்துவது மக்கள் விரோத போக்கு- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு ஆண்டுக் கால தி.மு.க. ஆட்சியிலே எதிர்பார்த்த மக்கள் இன்றைக்கு ஏமாந்து போய் இருப்பது வருத்தத்துக்குரியது, கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது, தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. புதிய கல்விக் கொள்கையில் ஏற்படும் சந்தேகங்களை விளக்க மத்திய அரசு இருக்கும் போது, இதனை … Read more

இந்தியாவில் குறைந்து வரும் நிலக்கரி இறக்குமதி- மத்திய அரசு தகவல்

புது டெல்லி: இந்தியாவில் உள்ள 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது.  இந்த அனல்மின் நிலையங்களுக்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்நாட்டிலேயே நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இது … Read more

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

நார்வே: நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார்.  இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார். இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த … Read more

பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது- அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் ஜவஹர் கே கிராமத்தில் 28 வயதான பாடகர் சித்து மூஸ் வாலா (28) மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், சித்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- பஞ்சாபில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் அதைச் சுற்றி அரசியல் இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். சித்து மூஸ் … Read more

கர்நாடகாவில் பேருந்து- சரக்கு வாகனம் மோதி பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி ?

கோவாவில் இருந்து ஐதராபாத்தை நோக்கி 29 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள கமலாபுரா அருகே இன்று அதிகாலை பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில், பேருந்து தீ பிடித்து மளமளவென பரவியது. பயணிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலத்த காயங்களுடன் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனர். இந்த விபத்தில் 22 பேர் பேருந்தில் இருந்து தப்பியதாகவும், 7 பேர் பலியாகியுள்ளதாகவும் … Read more