தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு

புது டெல்லி: பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. இந்த 57 எம்.பி. இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வரும் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மேல்சபை எம்.பி.க்களாக உள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (மூவரும்  தி.மு.க.) எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீத கிருஷ்ணன், ஏ.விஜயகுமார் (மூன்று பேரும் அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலம்  கடந்த 29-ந்தேதியுடன் நிறைவுபெற்றது. தமிழகத்தில் இருந்து இந்த 6 பேருக்கு பதில் … Read more

ரெய்டு பயத்தால் வாய் திறப்பதில்லை அதிமுக- பாரதிய ஜனதா மீண்டும் தாக்கு

ராசிபுரம்: அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடந்த சில தினங்களாக திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ள பா.ஜனதா முயற்சி செய்வதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி வார்த்தை போர் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஊழல்பற்றி பேச அ.தி.மு.க. பயப்படுவதாக மீண்டும் பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக இன்று நாமக்கல் மாவட்டம் … Read more

உத்தரபிரதேசத்தில் ரூ.80 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

புதுடெல்லி: பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக அம்மாநிலத்துக்கு இன்று காலை சென்றார். அவரை லக்னோ விமான நிலையத்தில் மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், மத்திய பாதுகாப்பு, மந்திரி ராஜ்நாத்சிங், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பின்னர் லக்னோவில் உள்ள இந்திராகாந்தி அரங்கில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இதில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறை, தகவல் தொழில்நுட்பம், மற்றும் … Read more

சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்  இன்று நடைபெற்ற மாநில முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஒரு நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு நாடு- ஒரே மொபிலிட்டி கார்டு,  ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு ஆகிய முயற்சிகள் அனைத்தும் எங்களின் திடமான மற்றும் தெளிவான கொள்கைகளின் பிரதிபலிப்பு.  சமீபத்தில் நாங்கள் 8 வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு- ராகுல்காந்தி ஆஜராக சம்மன்

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது. அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. இதன்மூலம் … Read more

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் கூடாது – சுப்ரீம் கோர்ட்

புது டெல்லி: நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் மரங்களை வெட்டுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட டி.என்.கோதவர்மன் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கு தொடர்பாக அவ்வபோது இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் மற்றும் அனுராதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.  … Read more

அண்ணாமலையும் அர்ஜூன் சம்பத்தும் ஒன்றுதான்- டாக்டர் ஷர்மிளா பரபரப்பு பேட்டி

சென்னை: மாலை மலர் இணையதளத்திற்கு டாக்டர் ஷர்மிளா அளித்த சிறப்பு பேட்டியில், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் குற்றவாளியா இல்லையா என்பதில் நிறைய கேள்விகள் உள்ளன. விசாரணை  நடைபெற்ற நேரத்தில் நிறைய மறைக்கப்பட்டுள்ளன. ராஜிவ்காந்தி படுகொலையில் சர்வதேச சதி இருப்பதாகவும், எல்டிடிஈயினர் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டனர் என்பது குறித்தும்ம் நிறைய புத்தகங்கள் வெளி வந்துள்ளன.  இந்த வழக்கில் பேரறிவாளன் குற்றவாளிதான், அதை நாம் மறுக்க முடியாது. அவர் செய்த குற்றத்திற்கான … Read more

கீழ்திருப்பதியில் பக்தர்கள் 30 ஆயிரம் பேர் தங்கி ஓய்வெடுக்க வசதி

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் போகால அசோக்குமார் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே மலையில் பக்தர்களுக்கு 7400 வாடகை அறைகள் உள்ளன. அதில் 30 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கீழ் திருப்பதியில் மேலும் 30 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் … Read more

ஆரூர்தாசுக்கு விருது, ரூ.10 லட்சம் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி விருதாளரை தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை … Read more

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடாதீர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

நாக்பூர்: ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார். உ.பி., மாநிலம் வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில், சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மசூதிகளிலும் இதுபோன்ற ஆய்வை நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து நாக்பூரில் … Read more