#BIG NEWS : ஜனாதிபதியின் சென்னை வருகை திடீர் ரத்து..!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இதனைத் திறந்து வைத்திட வருமாறு ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் ஜூன் 5-ம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு தலைவர் திரெளபதி … Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை!!

தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை மணப்பெண் 20 கி.மீ ஓடிச் சென்று பிடித்துவந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அதான் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம்பெண்ணும்காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர். இதையடுத்து எளிமையாக கோவிலில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, திருமண நாளன்று மணப்பெண் உட்பட அனைவரும் வந்திருந்தனர். ஆனால், மாப்பிள்ளை வரவில்லை. நீண்ட நேரமாகியும் மணமகன் வரவில்லை என்பதால், அவரை தேடி மணமகளே சென்றார். … Read more

மழையால் வீடு இடிந்து 3 வயது குழந்தை பலி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பசவனத்தொட்டி கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. அப்பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ், அவரது மனைவி, இரு பிள்ளைகள், அவரது பெற்றோர் என 6 பேர் வசித்து … Read more

தமிழ்நாட்டில் கோர விபத்து… 5 பேர் பலி!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒப்பனையால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது. தரிசனம் முடித்துவிட்டு குடும்பத்தினர் மீண்டும் தங்களது சொந்த ஊரான ஒப்பனையால்புரம் கிராமத்திற்கு காரில் திரும்பினர். நெல்லை – சங்கரன்கோவில் சாலையில் திருமலாபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, னியார் பள்ளி பேருந்து மீது மோதியது. இதில் 5 … Read more

விபத்தில் சிக்கி பிரபல இளம் நடிகை மரணம்!!

ஹிந்தி நடிகை வைபவி உபாத்யாயா, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவி உபாத்யாய் (32) கடந்த 2017ஆம் ஆண்டு சாராபாய் vs சாராபாய் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் ஜாஸ்மின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் அவர் இந்தி சின்னத்திரையுலகில் பிரபலமானார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடர் மூலம் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. பல பிரபலமான இந்தி தொடர்களில் நடித்த இவர், திரைப்படத்திலும் நடித்தார். தீபிகா படுகோன் நடிப்பில் … Read more

முன்னாள் முதலமைச்சர் கவலைக்கிடம்!!

லோக்சபா முன்னாள் சபாநாயகரும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி (85) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த அரசியல் தலைவரான மனோகர் ஜோஷி , மும்பை மேயராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தார். அவர் 1995 முதல் 1999 வரை முதல்வராகவும், பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்துள்ளார். மகாராஷ்டிராவின் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் இவர்தான். சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் நெருங்கிய கூட்டாளிகளில் … Read more

குட் நியூஸ்! நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது!!

இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில் இனி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, உ.பி., அரியானா, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இதனால் … Read more

வாட்ஸ்அப்பில் மெசேஜை எடிட் செய்யும் அம்சம் அறிமுகம்..!!

வாட்ஸ்அப் தளம் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், பல தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தனித்துவமான அம்சத்தை வழங்கும் விதமாக மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அறிமுகமாக்கி உள்ளது. அதில் பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜின் சாட்-டை … Read more

இனி வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் இந்த தகவலை கேட்கக்கூடாது..!!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொடர்பு எண் விவரங்களைத் தரவில்லை என்றால் ரசீது போட முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஆகும். இவ்வாறு தகவல்களை சேமிப்பது தவறான செயலாகும். எனவே, வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சில்லரை வியாபாரத்துறைக்கும், இந்திய தொழில் சம்மேளனத்துக்கும், இந்திய வர்த்தக தொழில் சம்மேளனத்துக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், குறிப்பிட்ட … Read more

இந்த நிற ஆவின் பால் நிறுத்தம் ? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற டீமேட் பால் பாக்கெட்டும் ஒன்று. இந்த பால் பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. டீ கடைகள், கேண்டீன்கள், இனிப்பகங்கள் போன்றவைகளின் தேவைக்காக இந்த சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 30 ரூபாய் ஆகும். இந்த சிவப்பு நிற பால் பாக்கெட்டில் 6.5 சதவீதம் … Read more