#BIG NEWS : புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு செங்கோல்..!!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.ஆனால் மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா, மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான … Read more

காரில் வந்த குடும்பத்தினரின் சட்டையை கிழித்த சுங்கச்சாவடி ஊழியர்கள்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று நண்பகல் சென்னையில் இருந்து பிரபு என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் வந்த போது, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த பிரபு காரை நிறுத்திய போது, அந்த காரை மூன்றாவது வழித்தடத்தில் செல்லுமாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.அங்கு பிரபுவின் வாகனம் வந்தது. அப்போது பாஸ்ட்டேக்கில் கட்டணம் எடுக்கப்பட்ட பின்னரும் அவரது கார் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியர்களை பிரபு திட்டியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து வாகனத்தை … Read more

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு..!!

புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பையும் கடந்து கட்டமைப்பு பணிகள் விரைவாக நடந்து முடிவடைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற … Read more

இனி பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் தேவையில்லை..!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து வயது வரை கட்டணம் தேவையில்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழக போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி … Read more

மும்பையை மிரளவிட்ட தாராவி சிறுமி!! குடிசை பகுதி டூ சர்வதேச மாடல்…!

குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கார்வா சமுதாய மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி மலீஷா கார்வாவின் குடும்பம் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி குடிசைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. கழிப்பறை இல்லாத குடிசை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வாழ்ந்து வந்த மலீஷாவின் வாழ்வில் கடந்த 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் ராபர்ட் … Read more

இனி இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய தரச்சான்று அவசியம்..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்தது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என்றும், ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரியை குறிப்பிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து, வெளிநாட்டு … Read more

புதிய பார்லி. கட்டிடம் பிரதமர் மோடி, ஓம் பிர்லா முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.!!

நாடாளுமன்ற புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ம் தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தியது. எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரால் அல்ல என்றும் ராகுல் காந்தி சமீபத்தில் கூறினார். இதனால் சர்ச்சை … Read more

பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : தமிழக அரசு அரசாணை..!!

வளர்ச்சிப் பணியைத் துரிதப்படுத்தி, இயற்கை சீற்ற நேரத்தில் அவசரகால பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேருவும், தேனி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக ஐ.பெரியசாமியும் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் … Read more

நடிகை பவித்ரா வீட்டில் நடந்த துயரம்- துடித்துடிப்போன ரசிகர்கள்..!!

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ’ஓ காதல் கண்மணி’ படத்தில் துணைநிலை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பவித்ரா லக்ஷ்மி. அதை தொடர்ந்து நாய் சேகர், உல்லாசம், யூகி மற்றும் மலையாளத்தில் அத்ரிஷ்யம் படங்களில் நடித்துள்ளார். எனினும் ‘குக் வித் கோமாளி- சீசன் 3’ நிகழ்ச்சியில் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில வெப் சிரீஸுகளிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் … Read more

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI)பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று 24.05.2023 … Read more