தேசத்தின் பெருமைக்காக விளையாடுவதற்கு பதிலாக மல்யுத்த வீரர்களை பாதுகாப்பிற்காக போராட வைத்துவிட்டோம்..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கடந்த ஒரு மாதமாக வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களின் … Read more

சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்து தோற்றதால் நண்பருடன் உறவு வைக்க சொல்லி அடித்து உதைத்த கணவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் நபருக்கும் பெண் ஒருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கணவன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தினமும் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளாராம். இதனால் பணத்தை இழந்துள்ளார். இவரது குடும்பமும் வறுமையில் தள்ளாடியது. ஆனால் அவர் இதை பொருட்படுத்தாமல் தினமும் குடித்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பெண்ணின் கணவன் சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். … Read more

பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர்..!

ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதுகுறித்து இங்கு காணலாம். அதாவது, பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர். மேலும். திருமணத்திற்கு முன் காதலிக்கும்போது இதனை ஆண்கள் தேடுகின்றனர். இதுகுறித்து இங்கு முழுமையாகதெரிந்துகொள்ளலாம். தங்களைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள்: பெண்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்பவராக இருந்தால், அவர்கள் மிகவும் தைரியமாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்களாகவே பெரிய முடிவுகளை எடுக்க வல்லவர்கள். … Read more

வாட்ஸ் அப்பில் செம அப்டேட் கொண்டு வந்த மெட்டா..!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. … Read more

மக்களுக்கு குட் நியூஸ்..!! அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை..!

வெப்ப சலனம் காரணமாக, இன்று (மே 23) முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 – 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29 டிகிரி … Read more

லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா நோக்கி காரில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, டெல்லி- சண்டிகர் நெடுஞ்சாலையில் திடீரென காரை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள சாலையோர உணவகங்களுக்கு சென்றார். அங்கு உணவருந்திக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, சிறிது நேரம் அவரிடம் உரையாடினார். பின்னர், லாரி ஒன்றில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தவாறு, ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் பேசினார். எவ்வித திட்டமிடலும் இன்றி ராகுல் காந்தி லாரியில் பயணம் செய்த வீடியோ … Read more

ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர்..!!

கேரளாவிற்கு வந்த இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், நேற்று முன்தினம் (மே 21) திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று (மே 22) கண்ணூருக்கு வந்த துணைக் குடியரசுத் தலைவர், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தனது கணித ஆசிரியராக இருந்த ரத்னா நாயர் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசிப் … Read more

விரைவில் வருகிறது பிரதமர் மோடி பெயரில் புதிய மாம்பழ ரகம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான ஊர்ப்புற மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிலொரு மாம்பழ வகை, பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைவுபடுத்தி இருக்கிறது. உடனடியாக அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கத் திட்டமிட்டார் உபேந்திரா சிங். இதையடுத்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அந்த மாம்பழத்தை ஆய்வகத்தில் இருந்தவர்களும் … Read more

யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

2022-ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமை பணி தேர்வுகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. 2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி … Read more

இனி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு..!!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ஜூன் 1 2023 முதல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படுவது அவசியமாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், … Read more