2,000 நோட்டுகளை மாற்ற ஆவணம் வேண்டுமா?

வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது. அதேபோல, 2,000 நோட்டுகளை வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 … Read more

பிரபல இசையமைப்பாளர் காலமானார்!!

தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமானார். தோடகுரா சோமராஜூ என்ற இயற்பெயர் கொண்ட ராஜ், கோடி என்ற மற்றொரு இசையமைப்பாளருடன் சேர்ந்து படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் டி.வி.ராஜூவின் மகன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இவரது குழுவில் சில வருடங்கள் பணிபுரிந்துள்ளார். கோடியுடன் சேர்ந்து ராஜ் 180 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் இசை அமைத்த 3000 பாடல்களில் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பியும், சித்ராவும் பாடியுள்ளனர். 1994ஆம் ஆண்டு நாகர்ஜூனா நடித்த … Read more

திமுகவின் முக்கிய நிர்வாகி சஸ்பெண்ட்!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும் அப்துல் வகாப் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மைதீன்கான் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். மற்றொரு அறிவிப்பில், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக … Read more

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை..!!

சென்னை கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற 27 வயதான இளைஞர், மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு வருட காலப் பயிற்சிகளை எடுத்து, ஆறு மலை உச்சிகளில் ஏறி தன்னை தயார்படுத்திக் கொண்ட ராஜசேகர், கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி அன்று எவரெஸ்ட் மலை அடிவார முகாமில் இருந்து தொடங்கி, 8,850 மீட்டர் உயரத்தை மே 19- ஆம் தேதி அதிகாலை 05.30 மணிக்கு கடந்து … Read more

#BIG NEWS : நாளை முதல் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும் – தமிழக அரசு உத்தரவு..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடத்திற்கான அனுமதி நாளை முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும். புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி … Read more

+1 தேர்வில் தோல்வி.. விபரீத முடிவை எடுத்த மாணவி… உடலை எரித்த உறவினர்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த தும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லாபுரி. இவரது மனைவி விமலா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் புவனேஸ்வரி (16). இவர், திருத்தணி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நடந்த முடிந்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் புவனேஸ்வரி இரண்டு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் … Read more

முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பொதுமக்களுக்கு தெளிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று தேயிலை கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி,காட்சி அரங்குகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து நேற்றும் இன்றும் ஆகிய இரு நாட்கள் தேயிலை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதோடு, … Read more

இந்த நேரத்தில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் வெயில் தாக்கத்தை தவிர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கின்றோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், வெயில் நேரத்தில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம். மாநகராட்சி அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் ors இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை ஒரே உள்ள கடைகளுக்கு நிழற்குடை இருப்பதை உறுதி செய்துள்ளோம். தனியார் … Read more

இனி ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிய தடை..!!

அசாமில் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளை பள்ளி கல்வி துறை நேற்று அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பில், ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெகிங்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என அதற்கு விளக்கமும் அளித்து உள்ளது. அந்த அறிக்கையில், கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிகின்றனர் என எங்களின் கவனத்திற்கு வந்தது. பெருமளவிலான மக்கள் ஏற்று … Read more

முதல்வர் சித்தராமையா முதல்வராக பதவியேற்ற உடனே 5 உத்தரவாதங்கள் அமல்..?

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டன. அவற்றில், தேர்தலையொட்டி மக்களுக்கு 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்து இருந்தது. அவையாவன, கிரக ஜோதி எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரக லட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2,000 வழங்குதல், அன்ன பாக்யா எனப்படும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ … Read more