வரும் செப்.30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும்..!!

புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து … Read more

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும்

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. கிளீன் நோட் பாலிசி அடிப்படையில் 2 ஆயிரம் … Read more

ஒரு நாளில் எத்தனை 2000 நோட்டுக்களை மாற்றலாம்..?

ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தற்போது 2000 நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் சுமார் 3,5 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 2000 ரூபாய் நோட்டுக்களை விட தற்போது … Read more

கூகிள் மேப் பொய் சொல்லாது என யாரு சொன்னா ?

கேரளா, மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள போர்டு கொச்சி பகுதியை சேர்ந்த 8 நண்பர்கள் ஏதாவது நீர்விழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அப்போது அவர்கள் நீண்ட நெடிய கலந்துரையாடலுக்கு பின்னர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் உள்ள கிழார் குன்று நீர்வீழ்ச்சிக்கு செல்வது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மலையிஞ்சி பகுதி வரை வாகனத்தில் அனைவரும் சென்றனர். இதன் பின்னர் வனப்பகுதியில் நடந்து … Read more

வாகன ஓட்டிகளே உஷார்..! அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம் சென்னையில் அறிமுகம்.!

சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் கையடக்க கருவி மூலம்நேரடியாக அபராதம் விதிக்கின்றனர்.மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் களப்பணியில் உள்ள போக்குவரத்து போலீஸார் விதி மீறல் வாகனஓட்டிகளை தங்களது செல்போனில்படம் பிடித்து, அதன் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. 2022-ல்விபத்துகள் 11.84 சதவீதம் குறைந்துள்ளது. இந்த … Read more

காணாமல் போன 12 வயது கோவை சிறுமி பத்திரமாக மீட்பு.!!

கோவையை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானார். இதையடுத்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, 6 தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சிறுமி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியை தனிப்படை போலீசார் கோவை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அதிகமாக செல்போன் பார்ப்பதாக கூறி சிறுமியில் தாய் திட்டியதாகவும், இதனால் … Read more

மாணவர்களே மறக்காதீங்க..!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்பு இடங்களில் சேர்வதற்கு மே.8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பி.காம் படிப்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள … Read more

நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் பொருநை அருங்காட்சியகம்..!!

தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிபடுத்தும் விதமாக ரூபாய் 33.02 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இடம் தேர்வு … Read more

குலவை போட்டு ரஜினிகாந்தை கிண்டல் செய்த அமைச்சர் ரோஜா :கடுப்பான ரசிகர்கள்..!

ஆந்திர மாநிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்டிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக அதில் பங்கேற்று இருந்தார். என் டி ஆரின் மகன் பாலகிருஷ்ணாவும் மருமகன் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அந்த விழாவில் பங்கேற்றிருந்தனர். விழாவில் என்டிஆர் இன் பெருமைகளை பேசிய ரஜினிகாந்த் , சந்திரபாபு நாயுடு -பாலகிருஷ்ணா ஆகியோரின் பெருமைகளையும் பேசினார் . சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஹைதராபாத் எப்படி வளர்ச்சி பெற்றது என்பது குறித்து எடுத்துச் சொன்னார் ரஜினி. … Read more

இன்று கூடும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த 7 நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் ஜப்பான் நடத்துகிறது. உலகில் முதல் முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடோவின் சொந்த ஊர் என்பதாலும், அணுஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்கான சிறந்த இடம் என்பதாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஜி7 … Read more