ஜப்பான் சென்று பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட தைவான் விமான நிறுவன தலைவர்..!!

கிழக்காசிய நாடான தைவானில் இயங்கி வருகிறது ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம். இந்த விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று கடந்த வாரம் ஜப்பானுக்கு 3.45 மணியளவில் புறப்பட வேண்டி இருந்தது. ஆனால், வானிலை காரணமாகவும், பாராமரிப்பு காரணமாகவும் விமான புறப்பட வேண்டியதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. விமானம் இல்லாததால் இரவு 11 மணி வரை பயணிகள் நரிடா விமான நிலையத்திலே தவித்தனர். உணவு உண்ணாமல், உறங்காமலும் பயணிகள் இருந்ததாக தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. … Read more

அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது இந்தியா..!

சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் … Read more

காதலியின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி டார்ச்சர்!!

பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக தாக்கி அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிகுன்ஞ் குமார் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அந்த இளைஞருக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு பிரிந்து வாழ்ந்து வருவது அந்தப்பெண்ணுக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவருடன் சண்டை போட்டுள்ளார். … Read more

பாம்பே ஜெய்ஸ்ரீயின் தற்போதைய நிலை – மகன் வெளியிட்ட தகவல்..!!

கடந்த மார்ச் மாதம் பல்வேறு இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாம்பே ஸ்ரீ பிரிட்டன் சென்றிருந்தார். அப்போது மார்ச் 25-ம் தேதி பிரிட்டனில் தான் தங்கியிருந்த அறையில் நினைவிழந்து மயங்கிக் கிடந்துள்ளார் பாம்பே ஜெய்ஸ்ரீ. உடனடியாக அவர் வெஸ்ட்மினிஸ்ட் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் மூளையில் ரத்த உறைதல் ஏற்பட்டு, அவருக்கு குருதிநாள அழற்சி நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக பலதரப்பட்ட உயர் சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டன. கடந்த ஒரு மாத காலம் மருத்துவமனையில் தங்கி … Read more

நாளை தேர்வு முடிவுகளை அமைச்சர் அறிவிக்கமாட்டார்!!

நாளை 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடமாட்டார் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு, பத்தாம் வகுப்புக்கும், நாளை பிற்பகல், 2 மணிக்கு, 11ஆம் வகுப்புக்கும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு, மதிப்பெண் விபரம் தெரிந்து கொள்ளலாம். பள்ளியில் மாணவர்கள் வழங்கிய உறுதிமொழி கடிதத்தில் … Read more

மத்திய அமைச்சரை தூக்கி அடித்த பாஜக அரசு!!

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே நீதிமன்றங்களுக்கான கொலீஜியம் நியமனங்களை அவர் விமர்சித்து வந்தார். உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பான சர்ச்சை கொலீஜியம் முறை அமலில் இருக்கும் வரை தொடரும் என்றார். நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையை கொலீஜியம் உருவாக்கியுள்ளது என்றும் விமர்சித்தார். … Read more

போதை ஆசாமியை குடும்பத்தாரே தீர்த்து கட்டிய கொடூரம்!!

போதைக்கு அடிமையான நபரை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்து தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள அம்பத் தாலுகா பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (35) என்பவருக்கு நிர்குன் என்ற மகன் உள்ளார். மது, கஞ்சா போதைக்கு அடிமையான தர்மராஜ், தனது தந்தை நாராயண் சகோதரர் கரண்ராஜ் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தர்மராஜ் தினமும் போதையில் வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். வீட்டார் கண்டித்தும் அவர் மாறவில்லை. இதனால் அவரது … Read more

தி கேரளா ஸ்டோரி– உச்சநீதிமன்றம் அதிரடி!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மறைமுக தடை விதிக்கக்கூடாது என்றும், மேற்குவங்கத்தில் விதித்த தடையை நீக்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எவ்விதத்திலும் தடையும் … Read more

வரும் ஜூன் 30-ந் தேதி இறையன்பு மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒய்வு..!!

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரான இறையன்பு மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெறுகின்றனர். இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார். இவர் தற்போது தொழில் முதலீட்டு நிறுவனத்தில் (டிக்) கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் … Read more

அனைத்து சத்துணவு குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல்: அரசாணை வெளியீடு..!!

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார். சத்துணவு/குழந்தைகள் மையங்களில் பயனடைந்து … Read more