நாளை உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!!

ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது. அந்த அவசர சட்டத்துக்கு … Read more

நாளை பிற்பகல் பதவி ஏற்கிறார் சித்தராமையா?

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா நாளை பிற்பகல் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ், அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால், அடுத்த முதல்வர் யார் என்பவதில் குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். எனவே, அடுத்த முதலமைச்சராக யாரை அறிவிப்பது என்பது குறித்து டெல்லியில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராகுல்காந்தியின் இல்லத்தில் முதலில் … Read more

பரபரப்பு! கூலித் தொழிலாளி கல்லால் அடித்து கொலை!!

சேலம் அருகே கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னம்மாப்பேட்டை அருகே செங்கல் அணை பகுதியைச் சேர்ந்த ராஜகணபதி (47) என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனா 15 வருடத்திற்கு முன்பு தனியே சென்று விட்டார். இதனால் ராஜகணபதி அவரது அண்ணன் செல்வம் வீட்டில் வசித்து வந்தார். கீழ் வீட்டில் ராஜகணபதியும் மேல் மாடியில் அண்ணன் செல்வமும் வசித்து வந்தனர். இந்நிலையில் ராஜகணபதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் … Read more

காங். முன்னாள் எம்.பி., ராகுல்காந்தி அமெரிக்கா பயணம்..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பத்து நாள்கள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி, ஜூன் 4ஆம் தேதி நியூ யார்க்கின் மாடிசன் சதுக்க தோட்டத்தில், சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் பேரணியை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர, ராகுல், வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று, ஸ்டேன்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்றவிருக்கிறார். அமெரிக்க பயணத்தின்போது அவர் அந்நாட்டு … Read more

அதிர்ச்சி! பெண் சிங்கம் போலீஸ் அதிகாரி விபத்தில் பலி!!

பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நகோன் மாவட்டம் மொரிகொலாங் போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜுமொனி ரபா (30) பெண் சிங்கம் என்று பலராலும் அழைக்கப்பட்டவர். மோசடி வழக்கில் தனது வருங்கால கணவரையே அவர் கைது செய்தார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து பிரபலமானார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்தன. அதனால் … Read more

பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..!!

மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் கோயில் கட்டிடக் கலை ஆய்வாளர் தேவி தலைமையிலான குழுவினர், அந்த கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த கல்வெட்டு மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 43- ஆம் ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டு எனத் தெரிய வந்தது. பிற்கால பாண்டியர் மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சிக்காலம் குறித்த தகவல்களுடன் இந்த கல்வெட்டு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கல்வெட்டு, 1311- ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டதாகவும் முழு … Read more

100 மணி நேரம் இடைவிடாது சமைத்து புதிய உலக சாதனை ..!!

நைஜீரிய சமையல்காரர் ஹில்டா பாசி 100 மணிநேரம் சமைத்து, தற்போதைய சாதனையை முறியடித்து, அதிக நேரம் இடைவிடாது சமைத்து புதிய உலக சாதனை படைத்தார். அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார். அவர் பெரும்பாலும் நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்தார்.அவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்தார். ஹில்டா பாசி, 110 உணவு வகைகளை சமைத்தார். இதற்கு முன்பு … Read more

அனைத்து பள்ளிகளிலும் இலவச நாப்கின் வழங்கும் மிஷின்கள் நிறுவப்படும்..!

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு வலி ஒரு பக்கமும், எரிச்சல் மறு பக்கமும் சேர்ந்து பாடாய் படுத்திவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, கறை பட்டு விடுமோ என்கிற பயமும் பெண்களுக்கு இந்த சமயத்தில் ஏற்படுவது இயல்பு. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைக்கக்கூடாது, பூஜை அறைக்கு செல்லக்கூடாது, வீடுகளில் புழங்கக்கூடாது என ஏற்கனவே உடல் ரீதியில் நொந்துகிடக்கும் பெண்களை மனரீதியாகவும் நோகடிப்பதை பார்த்திருப்போம். அதேபோல, அவர்களுக்கு தேவையான … Read more

வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்..!!

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப் பாதை) சீரமைப்பு பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக பாராளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. டாடா புராஜக்ட்ஸ் … Read more

டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் முக்கிய உத்தரவு..!!

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க். இதனிடையே, மின்சார கார் நிறுவனமான டெஸ்லா கடந்த காலாண்டில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த வருமானத்தையே பெற்றுள்ளது. போட்டி அதிகரித்துள்ளதால் டெஸ்லா கார்களில் விலையையும் குறைத்து வருகிறது. இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதியாக யாரையும் வேலைக்கு சேர்க்கக் கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். வாரம் தோறும் புதிதாக வேலைக்கு ஆள் … Read more