திருட்டு போன மொபைல் போனை கண்டறிய புதிய இணையதளம்: நாளை அறிமுகமாகிறது..!!

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் நாளை (மே 17ம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு, சஞ்சார் சாதி என்ற பெயரில் புதிய பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இணையதளம் வாயிலாக, மக்கள் தொலைந்த அல்லது திருட்டு போன மொபைல் போன் குறித்த விவரங்களை அளித்து, அதனை கண்டறிய உதவி பெற முடியும். மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், www.sancharsaathi.gov.in என்ற புதிய இணையதள சேவையை துவங்கி வைக்க … Read more

சென்னை மக்களே..!! ஆகாய நடைமேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னையில் மிகவும் பரபரப்பான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி தி.நகர். சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்குள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அது மட்டுமின்றி சென்னை புறநகர் பகுதியில் இருந்து தி.நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதியாக தி.நகர் விளங்குகிறது. சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தியாகராய நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரெயில் … Read more

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டதா ? இனி கவலை வேண்டாம்..!!

டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு பகுதிகளில் இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விரைவில் அறிமுகம் ஆகும் இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டியது என்னவென்றால், CEIR இணைய சேவை மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை … Read more

மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள முடக்கியது அமலாக்கத் துறை..!

கோவையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மார்ட்டின். லாட்டரி விற்பனைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை இவர் செய்து வருகிறார். தவிர, கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார்.கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது. இதற்கருகே, அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. அமலாக்கத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மே 11 மற்றும் 12ம் … Read more

கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா ?

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாரான நிலையில், முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இதனிடையே கட்சி தலைமையை சந்திக்க சித்தராமையா இடெல்லி சென்றுள்ளார். கர்நாடக காங்கிரஸ் … Read more

இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி சத்துணவு கூடங்களில்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் நுறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, ஏனையவற்றுக்கிடையே. மாண்புமிகு அமைச்சர் (சமூக நலன்-மகளிர் உரிமை) அவர்கள் பின்வரும் அறிவிப்பினை செய்துள்ளார்கள்:- சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் … Read more

டெல்லிக்கு செல்லாதது குறித்து காரணம் கூறிய டி.கே. சிவக்குமார்..!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது . ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது. அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு நேற்று மதியம் … Read more

முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை..!! எங்கு தெரியுமா ?

பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரமதர் மோடி மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் தொடங்கி வைத்தார். இருப்பினும், அதிக விலைக் கட்டணங்கள் காரணமாக, முதல் நாளிலிருந்தே … Read more

பள்ளி மாணவிக்கு எமனாக மாறிய மரத்தின் கிளை..!சுருளியில் சோகம்..!

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரில் வசித்து வருபவர் நிக்ஸன் (47). கார் ஓட்டுநரான இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்ஸன் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி அவர் தனது மனைவி, குழந்தைகள் … Read more

பரபரப்பு! நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்!!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இண்டிகோ விமானம் ஒன்று துபாயில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு வந்தது. விமானம் இறங்கிய பின்னர், அதிலிருந்த நபர் ஒருவர் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அவர் ஜலந்தர் … Read more