உலகிலேயே சிறந்த அம்மா நீ தான்… நயன்தாராவை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தான் தற்போது கோலிவுட்டின் ஸ்டார் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்து இந்த ஜோடி கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு வாடகைத்தாய் முறை மூலம் இருவரும் குழந்தை பெற்றுக் கொண்டனர். அதில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்தன. உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக் தைவிக் என் சிவன் குழந்தைளுக்கு பெயர் வைத்துள்ளனர். குழந்தைகளை இருவரும் கண் … Read more

ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மான்யா குப்தா..!

சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பு நடத்திய ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஹெரிடேஜ் பள்ளியை சேர்ந்த மாணவியான மான்யா குப்தா, 12-ம் வகுப்பு ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 99.75 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்திய அளவில் முதல் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.2 … Read more

#BIG NEWS : விழுப்புரம் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் எக்கியார் குப்பம் மீனவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததில் நேற்று வரை 6 பேர் பலியாகினர். இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. … Read more

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமனம்..!!

சி.பி.ஐ. இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெயிஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மூன்று மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை பிரதமர் தலைமையிலான … Read more

உழைக்காதவர்களுக்கு எல்லாம் கட்சியில் இடமில்லை..!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய ஆலோசனைகளை நடத்த வேண்டும் என்பதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த கூட்டத்தில் ரொம்பவே கறார் காட்டி பேசி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உழைக்காதவர்களுக்கு எல்லாம் கட்சியில் இடமில்லை என்ற எடுத்த எடுப்பிலேயே சாட்டையை சுழற்றி இருக்கிறார் . தொடர்ந்து அது குறித்து பேசிய முதல்வர், மாவட்ட செயலாளர்களை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் வருகின்றேன். கட்சிப் பணிகளை ஒவ்வொருவரும் … Read more

நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன். இந்த வாலிபர் மீது நான்கு கொலை வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. போலீஸ் ஆவணங்களின் ரவுடி பட்டியலிலும் இவரின் பெயர் இருக்கிறது. இந்த நிலையில் கலைவாணன் தன் வீட்டின் பின்பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்திருக்கிறார். நாட்டு வெடிண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே அவரின் 10 … Read more

என்னங்க சொல்றீங்க ? இரவு நேரத்தில் ‘வாட்ஸ்அப்’ உளவு பார்க்கிறதா?

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பொறியாளர் பதிவிட்ட ட்வீட் வைரலாகிவிட்டது, அதன்படி, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவரது வாட்ஸ்அப் மைக்ரோஃபோன் பயன்பாட்டில் இருந்தது. ட்வீட் விரைவில் கவனத்தை ஈர்த்தது, … Read more

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பற்றி தான்..!!

கூத்தாண்டவர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூவாகம் விழாவுக்கு பொதுவாக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் செல்வதில்லையாம். அதை சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம். சட்டமன்றத்தில் முதன் முதலில் நான் பேசியதே திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பற்றிதான். நீங்கள் உங்கள் குறைகளை சொல்ல எனது அலுவலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். வரும் காலங்களில் தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும். … Read more

ஒரே ஒரு மரம் தான்… பள்ளத்தாக்கில் போக இருந்த 38 உயிர்களை காப்பாற்றியது.!!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று கேரள அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு அருகே மலைப்பாங்கான சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழவிருந்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி பேருந்து மிகவும் ஆபத்தான நிலையில் நின்றது. உடனடியாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் … Read more

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் ? எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி … Read more