ஃபர்ஹானா திரைப்பட விவகாரம் – பிரபல இயக்குநர் வேண்டுகோள்!!

ஃபர்ஹானா திரைப்படத்திற்கு ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது. மேலும் இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் … Read more

கடன் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் திட்டம் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கு 2023-24 நிதி ஆண்டிற்கு ரூ.200 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு … Read more

பிரபல நடிகையின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!!

சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை சிவ சைலம் தெருவில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமியராக நடித்துள்ளார். படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்லாமிய பெண்ணான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக … Read more

தேர்தலில் போட்டியிட உள்ள விஜய் மக்கள் இயக்கம்!!

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மாணவரணி செயலாளர் தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே ஒட்டநாச்சியார்குடி என்ற பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட மாணவர் அணி தலைமை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட விஜய் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று ரத்ததான முகாம், … Read more

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

ஐசிஎஸ்ஐ பாடத்தின் கீழ் பயிலும் 10, 12ஆம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (ஐசிஎஸ்இ) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் சிரமமின்றி results.cisce.org என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் அரசு துறையும், அரசுசாராத் துறையும் பொதுக்கல்வியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அரசு சாராத் துறையான ஐசிஎஸ்இ, நாட்டின் தனியார் கல்வி பாடசாலைகளை … Read more

“நாட்டில் இனி மோடி அலை அல்ல, எங்கள் அலைதான்!!”

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டில் இனி மோடி அலை அல்ல, எங்கள் அலைதான் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. … Read more

தாயை கொடூரமாக கொன்ற ஜிம் மாஸ்டர்!!

66 வயது தாயை கத்தியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த ஜிம் மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே கோட்பந்தர் பகுதியை சேர்ந்த விலாஸ் பட்கர் (71) – வினிதா பட்கர் (66) தம்பதியின் மூத்த மகன் சங்கல்ப் பட்கர் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜிம் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த இவர், ஸ்டீராய்டு ஊசியை எடுத்துக்கொண்டார். மேலும் போதை பொருட்களையும் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவர் … Read more

உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.சுரேஷ், திரு.சங்கர் மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் … Read more

சமூக வலைத்தளங்களுக்கு குட்பை சொன்ன நடிகை..!!

கேரள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர் நஸ்ரியா நஜிம். இவர் கடந்த 2013 இல் வெளியான ‘நேரம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமான இவர் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் முன்னணி நடிகையானார். இந்நிலையில் மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்திவந்த அவர் தேசிய விருதுபெற்ற மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக இயங்கிவரும் இவர் … Read more

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

வேலூர் மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி 1 ம் தேதி விமர்சையாக நடைபெறும் இந்த ஆண்டு மே 15ஆம் தேதி கெங்கை அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது. இந்த சிரசு திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திர, கர்நாடக, மாநிலத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல … Read more