பெண் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சிறுவன்!!

போதைக்கு அடிமையான சிறுவன் பெண் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் விரக்தியான தாயார் தனது மகன் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீஸார் சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அன்றைய தினம் இரவு 10 மணி ஆகிவிட்டதால் சிறுவனை … Read more

ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்தால் ரூ.1.76 லட்சம் அபேஸ்!!

ஆன்லைன் மூலம் ரூ.1.76 லட்சம் மோசடி செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை புதுச்சேரி போலீஸார் கைது செய்தனர். புதுவையைச் சேர்ந்த கிருஷ்ணா சர்மா என்பவர் ஜிப்மர் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் லிங் ஒன்று வந்தது. அந்த லிங்கை பதிவிறக்கம் செய்த பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். … Read more

“கர்நாடகா தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கம் ஏற்படுத்தும்!”

கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்த தேர்தல் முடிவு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைக் கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் … Read more

ஒரு கயிற்று கட்டிலின் விலை ரூ.1 லட்சம்!!

நம் நாட்டின் பாரம்பரிய கயிற்று கட்டில் ஒரு லட்ச ரூபாய் என்று அமெரிக்காவில் உள்ள இணைய வணிக தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Etsy என்ற இ-காமர்ஸ் தளத்தில் இந்தியாவின் பாரம்பரிய கயிறு கட்டில் ரூ.1,12,039 என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்த கட்டில் தற்போது வழக்கொழிந்து போய்விட்டது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லட்ச ரூபாய் என்கின்றனர். இவ்வளவு விலை கொடுத்து யாராவது கயிறு கட்டிலை வாங்குவார்களான என நினைத்தால், இன்னும் 4 கட்டில்கள் தான் இருக்கிறது … Read more

ஐ.பி.எல் டிக்கெட்டுகளை வாட்ஸ் ஆப் மூலம் பிளாக்கில் விற்ற விஜய் டிவி பிரபலம் ?

பிரபல ரியாலிட்டி ஷோர் நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே நடைபெற்று முடிந்தது. எனினும் போட்டி நடந்த அன்று விஜய் தொலைக்காட்சி பிரபலமான நாஞ்சி விஜயன், ரூ. 1500 மதிப்பிலான டிக்கெட்டை … Read more

ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம்..!

சித்தூர் மாவட்டத்தில் உள்ள முடிவெடு உள்பட மூன்று பகுதிகளில் நீர்த்தேக்கம் அமைக்க முடிவெடுத்த ஆந்திர அரசு, அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றும், இந்த பணி தொடர்ந்தால், பல கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், சத்திய கோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், கட்டுமான பணிகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் … Read more

ராகுல் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் கீழமை நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், … Read more

குட் நியூஸ்..!! 5ஜி செல்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் குறைகிறது..!!

5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் இந்தாண்டு இறுதிக்குள் குறையக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான மின்னணு சிப்களைத் தயாரிக்கும் தைவானின் மீடியா டெக் நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் குவால்கா நிறுவனத்திற்கும் இடையே கடும் தொழில் போட்டி நிலவி வருகிறது. இதனால் அவை கணிசமாக விலையை குறைத்து வருவதால், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். 5ஜி சேவை அறிமுகத்திற்கு பிறகு டேட்டா நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. … Read more

மறைந்த நடிகர் ஜே.கே. ரித்தீஷின் மனைவி திடீர் கைது..!!

சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநராக இருந்த ஜே.கே. ரித்தீஷ் கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 46 மட்டுமே. நடிகராக மட்டுமில்லாமல் தி.மு.க கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். பிறகு அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் அதிமுக-வில் இணைந்தார். எதிர்பாராதவிதமாக ஜே.கே. ரித்தீஷ் உயிரிழந்த சம்பவம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் இறந்த … Read more

வங்கக்கடலில் மிகத்தீவிர புயல் ‘மோக்கா’ – 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோகா” புயலானது நேற்று (11.05.2023) மாலை 1730 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து இன்று (12.05.2023) காலை 0530 மணி அளவில் மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு- வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் … Read more