மதுரையில் 2,000 கிலோ கஞ்சா பறிமுகல்!!

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,000 கிலோ கஞ்சாவை மதுரை அருகே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் கஞ்சா இருப்பது தெரிய வந்ததது. கஞ்சாவை கைப்பற்றி கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ராஜா என்பவரின் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 40 கிலோவை மதுரைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் … Read more

மாணவ மாணவியரின் பட்டியலை சேகரிக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு..!!

+2 வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் இருபதாம் தேதிக்குள் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அதே போல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் முப்பதாம் தேதிக்குள் தயார் செய்து ஒப்படைக்குமாறு நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியருக்கு தேவைப்படும் அடுத்தக் கட்ட படிப்பிற்கான ஊக்கத்தொகையோ அல்லது நிதி உதவிகளையோ செய்வதற்காக இந்த பட்டியல் தயார் செய்து வருவதாகவும், … Read more

#BREAKING கர்நாடகா கருத்துக்கணிப்பு வெளியானது – ஆட்சி யாருக்கு?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்நாடகா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில், மொத்தம் உள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 107 முதல் 119 … Read more

“தோண்டப்படும் சாலையை உடனடியாக சரிசெய்யுங்கள்!!”

தமிழ்நாடு முழுவதும் தோண்டப்படும் சாலைகளை உடனடியாக சரிசெய்யுங்கள் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், சென்னையில் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளதை தான் காண்பதாகவும், இதனால் பொதுமக்கள் சிரமமடைவதாகவும் தெரிவித்தார். தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரை பெற்று … Read more

போலீசாரின் சிறு கவனக்குறைவால் பெண் இளம் மருத்துவர் கத்தரிக்கோலால் சரமாரி குத்திக்கொலை..!!

கேரள மாநிலத்தில் கொட்டாரக்காரா பகுதியில் வசித்து வந்தவர் சந்தீப். 42 வயதான சந்தீப், பள்ளி ஆசிரியர். மதுபோதைக்கு அடிமையாக இருந்திருக்கிறார் சந்தீப். போதைக்காக ஏராளமான போதை வஸ்துகளை சாப்பிட்டு வந்திருக்கிறார். போதையில் இருந்த சந்தீப், நேற்று இரவில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் . அப்போது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் தகராறு செய்திருக்கிறார். இதை அடுத்து கொட்டாரக்காரா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் அதிகாலையில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்காரா தாலுகாவில் … Read more

அடுத்த சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா?

மே 14ஆம் தேதி சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் மே 12ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை போட்டியை காண அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும் சென்னை சேப்பாக்கத்தில் போட்டி என்றால் கேட்கவா வேண்டும். டிக்கெட் வாங்க இரவே வந்து காத்திருக்கின்றனர். அப்படித்தான் இதுவரையிலான சென்னை போட்டிக்கு ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், மே 14ஆம் தேதி சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை … Read more

தளபதி விஜய்யை அவமதித்த பிரபல இயக்குனர் பாரதிராஜா, கவுதம் மேனன்!

இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன‘ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், அதிதி பாலன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது, “ சினிமாவை நேசித்தால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், … Read more

ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு!!

ஜீன்ஸ் பாக்கெட்டில் இளைஞர் ஒருவர் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஹரிஸ் ரகுமான் (23) என்ற இளைஞர் கோழிக்கோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இளைஞரின் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. ஹரிஷ் ரகுமான் உடனடியாக தீயை அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு லேசான தீக்காயம் … Read more

ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் மீது புகார் அளித்த ஹிந்துஸ்தான் கலைஞர்..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்‘ முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்‘ இரண்டாம் பாகத்தில் உள்ள பாடல்கள் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ‘வீரா ராஜ வீரா‘ என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் எங்கள் மெட்டு என்று இந்துஸ்தானி இசை கலைஞர் உஸ்தாத் வசிபுதீன் தாகர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இயக்குனர் … Read more

உடனே அப்ளை பண்ணுங்க..!! 12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்..!

மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப் பிரிவில் காலியாக உள்ள 251 உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் காலியிடங்கள்: 251  கல்வித்தகுதி: மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 31-05-2023 அன்று … Read more