டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி கொலை!!

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமலைநகர் அடுத்துள்ள தைலாவரம் பகுதியை சேர்ந்த சந்துரு (28) என்பவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இவர் கொலை மற்றும் கொள்ளை ஆகிய சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் … Read more

மாணவி மரணம் : விசாரணைக்கு ஒத்துழைக்காத பெற்றோர்?

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, … Read more

அச்சுறுத்தும் புதிய வகை டைப்பஸ் காய்ச்சல்!!

‘திருச்சியில் ‘டைப்பஸ்’ என்கிற புதுவகை காய்ச்சல் பரவி வருவதாகவும், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என தினமும் 70 பேர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அனைவரும் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதே நேரத்தில் 50 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் ‘டைப்பஸ்’ நோயின் அறிகுறிகளைக் கொண்ட, 73 பேருக்கு எலிசா சோதனை … Read more

பாஜகவினரை விரட்டியடித்த மக்கள்… காரணம் இதுதான்!!

புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தது. பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆவேசமடைந்த பா.ஜ.கவினர் கடைகளைத் திறந்த உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உப்பளத்தில் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். அங்கு வந்த பா.ஜ.கவினர் பள்ளியை மூடுமாறு வலியுறுத்தினர். தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை விடமுடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியது. இதைப்பார்த்த பெற்றோர்களும், பொதுமக்களும் உடனே ‘பள்ளியை … Read more

சிறுகோள் மீது விண்கலத்தை மோதச் செய்து நாசா அசத்தல்!!

பூமியை தாக்க வாப்புள்ள சிறுகோள் மீது விண்கலத்தை வெற்றிகரமாக மோதச்செய்து விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சாதனை படைத்துள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், கிரக பாதுகாப்புக்கான தற்போதைய பணியை நிர்வகிக்க நாசா, கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவி உள்ளது. … Read more

குமரி அனந்தனுக்கு அரசு வீடு.. அரசாணை வழங்கினார் முதல்வர்..!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்ட தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதியின் முதல் மகனாக 1933 மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். பெருந்தலைவர் காமராஜரின் அருமந்த சீடரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு … Read more

அதிரடி! பி.எஃப்.ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை!!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22ஆம் தேதி பாப்புலர் ஃபிரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்ற பெயரில் ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் … Read more

ஷின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்தினார். கடந்த ஜூலை 8ஆம் தேதி நாரா என்ற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷின்சோ அபே, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். இன்று அதிகாலை சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பூமியோ கிஷிடாவை சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவு குறித்தும், … Read more

ரஷ்யா வசம் இருந்த உக்ரைன் வீரரின் பரிதாப நிலை! வைரல் புகைப்படம்!!

ரஷ்ய ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உக்ரைன் ராணுவ வீரரின் புகைப்படம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் 7 மாதங்களை கடந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது. அதனால் 2 லட்சம் வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால் ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் போலந்து நாட்டிற்கு சென்று தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், போரில் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட உக்ரைன் ராணுவ … Read more

57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர்.. கிராம மக்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவில் முதல் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ் டிவிஷன் பகுதிக்கு உட்பட்ட விஜயநகர் என்ற கிராமத்தில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து … Read more