மே 28 – கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்! : திருமா..!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பாஜக அரசு திறக்கிறது. இது நாட்டுக்கு மிகப்பெரும் தலைக்குனிவாகும். இதைக் கண்டிக்கும் வகையில் மே 28 இல் இல்லம் தோறும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்; கறுப்பு உடையை அணிய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் குழி … Read more

75 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு!!

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை ஒட்டி மத்திய அரசு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் … Read more

#BREAKING பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு!!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு … Read more

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி தங்க நகைகள்!!

சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் நகரமே வெள்ளக்காடாக மாறியது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதற்குள் சென்ற காரில் இருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் … Read more

#BREAKING பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!!

ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே … Read more

பரவும் புதிய வகை கொரோனா… பீதியில் மக்கள்!!

புதிய வகை கொரோனாவால் வாரத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனா பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்தது. சீனாவில் தொடங்கினாலும் மற்ற நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதே தவிர, சீனாவில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. தங்கள் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா கூறியது. ஆனால், சீனா உண்மையை மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், சீனாவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வீரியம் மிக்க புதிய … Read more

பிரபல சீரியல் இயக்குநரின் மனைவி சடலமாக மீட்பு!!

செவ்வந்தி சீரியல் இயக்குனர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.என்.ரத்னத்திற்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சில காரணங்களால் குழந்தைகளை பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. ஓ.என். ரத்தினமும் அவரது மனைவியும் சென்னை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிரியா அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் … Read more

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!!

திகார் சிறையின் குளியலறையில் தடுமாறி விழுந்த காரணத்தால் டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவக் காரணங்களுக்காக கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திகார் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது,”சுமார் 6 மணியளவில் விசாரணைக் கைதியான சத்யேந்திர ஜெயின், சிஜே -7 மருத்துவமனையின் எம்ஐ அறையின் குளியலறையில் தடுமாறி விழுந்தார். பொதுவான பலவீனம் காரணமாக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களை அவரை … Read more

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் கொடுக்கப்போகும் ஸ்பெஷல் கிப்ட்..!!

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார். இதையடுத்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி … Read more

வாகன நிறுத்தத்தில் அரங்கேறிய சோக சம்பவம்..கூலி தொழிலாளியின் 3 வயது குழந்தை பலி..!!

கர்நாடக மாநிலம் கலபுரிகி மாவட்டம் ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ராஜு. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆனால் வாழ்வாதாரத்திற்காக தெலுங்கானா மாநிலம் பாக்யா நகருக்கு வந்தவர்கள் பிஎன் ரெட்டி நகர் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணாநகரில் வசித்து வருகின்றனர். ஹயாத் நகர் அருகே விரிவுரையாளர்கள் காலனியில் உள்ள பாலாஜி ஆர்கேட் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடுத்ததாக … Read more