வெளியானது மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள்!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தியா முழுவதும் 50 தேர்வு மையங்களில் மத்திய … Read more

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டட தொழிலாளியின் மகள்!!

செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளியான மனோகருக்கு ரக்ஷயா என்ற மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் அவருக்கு சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்பது லட்சியம். பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மோனோ … Read more

அனிருத்தின் தாத்தா காலமானார்!!

தமிழ் சினிமாவின் பழபெரும் இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார். பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மகன்களில் ஒருவரான எஸ்.வி.ரமணன் சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த இவர், அவ்வப்போது பின்னணி குரல் கொடுத்தும் வந்தார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இவரது பேரன். அதே போல் இவரது மற்றொரு பேரன் ரிஷிகேஷ் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ … Read more

மெரினாவுக்கு போனால் இலவச வைஃபை: சென்னை மாநகராட்சி அசத்தல்..!

சென்னை மெரினா கடற்கரையில், பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச இணைய சேவை (வைஃபை) வழங்கப்படுகிறது. 15-வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி … Read more

மாரடைப்பால் மயங்கிய முதியவர்: உயிர் காத்த சி.எஸ்.ஐ.எஃப் வீரர்கள்..!

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா (69). இருதய நோயாளியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து வெளியே செல்லும் போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சி.எஸ்.ஐ.எஃப் வீரர்கள், தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கும், விமான நிலைய மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் … Read more

7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!

ரஷ்யாவில், பள்ளிக்கூடத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்; 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இசேவ்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளிக்கூடத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கூடிய கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கிக்கிச் சூடு … Read more

மாதம் ரூ.50,000 சம்பளம்.. கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் வேலை..!

தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Marketing Manager காலியிடங்கள்: 11 சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள் தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 15-9-2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம்: … Read more

ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம்.. தப்பியோடிய இளைஞர் கைது..!

திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோவிலில் அமர்ந்து ஆபாச படம் பார்த்துவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கடந்த 19-ம் தேதி இரவு, இந்த கோவிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது இளைஞர் ஒருவர், கோவிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அத்துடன், தான் பார்த்த ஆபாச படத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா முன்பும் காண்பித்துள்ளார். இளைஞரின் இந்த அநாகரீகமான செயல் … Read more

விஷமானது விரும்பி சாப்பிட்ட சாண்ட்விஜ்.. 3 சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

ராணிப்பேட்டையில், பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட மூன்று சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவர், தனது குடும்பத்தினருடன் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பஜார் வீதியில் உள்ள ஒரு பேக்கரியில் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலமனும் அவருடைய மனைவி ரூபியும் தேநீர் அருந்தியுள்ளனர். சிறுவர்களான சைமன் (10), ரூபன்(7), ஜான்சன்(9) ஆகிய மூவரும் சாண்ட்விஜ் ஆர்டர் செய்து … Read more

23 மாவட்டங்கள்.. 3 நாட்கள்.. வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்..!

தமிழகத்தின் 23 மாவட்டங்களில், இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (செப்.26-ம் தேதி) முதல் 29-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. … Read more