மோரில் தூக்கமாத்திரை கலந்து கணவனைக் கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம் பாலாந்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோலா சுப்பாராவ் என்பவருக்கு வெங்கட லட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு வந்தது. மேலும் வெங்கட லட்சுமிக்கு வேறொருவருடன் நட்புறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நட்புறவு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது பழக்கம் கணவரின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதனால் தனது கணவருக்கும் தெரியவந்துவிடுமோ என்ற பயத்தில் வெங்கட லட்சுமி இருந்துள்ளார். இந்த … Read more

ரசிகர்களை மொக்க பண்ணிய தோனி!!

இன்று 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நேற்றைய தினம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அது என்ன அறிவிப்பாக இருக்கும் என பல்வேறு ஊகங்கள் வெளியாக தொடங்கின. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகளும் எழத்தொடங்கின. ஏற்கனவே அவர் திரைப்படம் தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அவர் தனது பதிவில் உற்சாகமான அறிவிப்பு என தெரிவித்திருந்ததால் ஒரு வேலை … Read more

பெரும் சோகம்.. மருத்துவமனையில் தீ.. தந்தை, மகன், மகள் பலி..!

ஆந்திராவில், புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தை, மகன், மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் கார்த்திகேயா மருத்துவமனை என்ற மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை … Read more

திடீர் உடல்நலக் குறைவு.. முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா, … Read more

பெட்ரோல் குண்டு – பாஜக மீது சந்தேகம் எழுப்பும் சீமான்!!

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக ஒடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒருபுறம், இசுலாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகாமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப்பலத்தின் … Read more

சிம்புவுக்கு கார், கௌதம் மேனனுக்கு பைக் பரிசு!!

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. படம் வெளியான முதல் … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது..!

புதிய கல்வி கொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (Common university entrance test ) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக் கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த முறை, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக் கழகங்களில் கலை சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக … Read more

குண்டு தாக்குதல் தொடர்ந்தால்.. அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்ந்து நீடித்தால், தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும். கோவையில் நாளை பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும். சட்டம் – ஒழுங்கு சீர்குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம். காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன். பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். … Read more

பெட்ரோல் கொடுக்காதீங்க.. பங்குகளுக்கு போலீஸ் உத்தரவு..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதையடுத்து, கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு … Read more

9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி: குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!

சிக்கமகளூருவில், மூளைச்சாவு அடைந்து 9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி ரக்‌ஷிதாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 8 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்த ரக்‌ஷிதா (17) என்ற மாணவி கடந்த 18-ம் தேதி கல்லூரிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரக்‌ஷிதாவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் … Read more