திட்டமிட்டபடி நாளை காலாண்டு தேர்வு.. கல்வித்துறை அறிவிப்பு..!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகள் நாளை தொடங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்துடன், நாளை (செப்.26-ம் தேதி) முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தது. ஆனால், … Read more

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்க பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு அலுவலகங்கள் நிர்வாக நலனை முன்னிட்டு சீரமைக்கப்பட்டும், புதிய அலுவலகங்கள் உருவாக்கம் செய்யப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்..!

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆரியதான் முகமது இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1952-ம் ஆண்டு கேரள அரசியலில் கால்பதித்த ஆரியதான் முகமது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். தொடர்ந்து, கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958-ம் ஆண்டு வரை இருந்தார். கேரளாவின் 10-வது சட்டசபையின்போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்தார். 1998 முதல் 2001-ம் ஆண்டு வரை கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் … Read more

டூ-வீலர் வாங்கப் போறீங்களா..?: இதோ புதிய விலைப்பட்டியல்..!

நாட்டின் பணவீக்கம், உதிரிப் பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் கடந்த 22-ம் தேதி முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை 1000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்தியாவில், ஹீரோ மோட்டோகார்ப்-ன் தற்போதைய தயாரிப்பு போர்ட் ஃபோலியோ ரூ.55,450 முதல் ரூ.1,36,378 வரையிலான பதினான்கு மோட்டார் சைக்கிள்களையும் (எக்ஸ்-ஷோரூம்) ரூ.66,250 முதல் ரூ.77,078 வரையிலான நான்கு ஸ்கூட்டர்களையும் உள்ளடக்கியது (எக்ஸ்-ஷோரூம்). இதில் விலையைத் தவிர … Read more

அடேங்கப்பா.. திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு தலைவர் சுப்பா ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர், “திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 இடங்களில் … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி; கம்பு, லத்தி, ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை..!!

இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்.2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுகிறது.இந்த ஊர்வலத்திற்கு செப்.28ம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்லத்திற்கு வழங்கியுள்ள நிபந்தனைகள் வருமாறு: அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் … Read more

இன்று புரட்டாசி அமாவாசை, மகாளய பட்சம்… வழிபட வேண்டிய முறைகளும் கிடைக்கும் பலன்களும்..!!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. இன்று புரட்டாசி அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்திய பதினைந்து நாட்களை மகாளய பட்சம் என்றும் சொல்வர். இந்த நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், … Read more

அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால் விமானப் படை கல்லூரி மாணவர் தற்கொலை!!

புதுடெல்லியில் உள்ள உத்தம் நகரில் வசித்து வந்தவர் அங்கித் குமார் ஜா (27). இவர் விமானப்படையில் அதிகாரியாக பணி செய்ய தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான தொழில்நுட்ப கல்லூரியில் அங்கித் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி கல்லூரி விடுதி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் ஜாலஹள்ளி போலீசார் … Read more

என்னப்பா சொல்றீங்க..!! லாட்டரியில் 25 கோடி வென்றதால் நிம்மதி இழந்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் வேதனை…!!

ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு இந்த ஆண்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவித்திருந்தது. ஒரு லாட்டரி சீட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் லாட்டரி குலுக்கல் கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்தில் நடந்தது. அதில், டிஜே 750605 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது. அந்த லாட்டரி சீட்டை திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் … Read more

இதை விட கொடுமை இருக்குமா..!! சாலையில் பெண்ணுக்கு பிரசவம்… 2 கி.மீ. பெற்ற குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்!!

ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதிக்கு உட்பட்ட துங்கால் கிராமத்தில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் … Read more