காசியில் வெறும் 8 ஆண்டுகளில் பிரதமர் கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் அதிசயமானது..!!

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிறகு, நகரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாராட்டிய அவர், “காசியில் கடந்த 8 ஆண்டுகளில் நடந்திருப்பது மிகவும் அதிசயமானது,” என்றார். 2012-ல் தான் காசிக்கு சென்றிருந்தபோது, அந்த நகரத்தை “அற்புதமும் அழுக்கும்” என்று வர்ணித்ததாகவும் ஆனால் தற்போது வெறும் 8 ஆண்டுகளில் இந்நகரம் அதிசயமாக மாறியுள்ளதாக கூறினார். தனது ஞானோதய தினமான 23-ம் தேதி, சத்குரு அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காசிக்கு ஆன்மீக புனிதப்பயணம் … Read more

பாரதிராஜா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி.. மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்..!

உடல்நலம் தேறி சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி போன்ற பிரச்சனை இருப்பதாக தெரிவித்து சிகிச்சை அளித்து வந்தனர். அந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதும், … Read more

7 கிலோ 750 கிராம் எடையிலான 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள கேடிஎம் பைக் வாங்கிய கல்லூரி மாணவன்..!!

ஈரோடு மாவட்டம் பவானியை அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் திருமூர்த்தி. சாயப்பட்டறையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இவரது மகன் சந்தோஷ்குமார் (25). இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்துவிட்டு விளையாட்டு இயக்குநருக்கான மேல்படிப்பை கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி இருந்து படித்து வருகிறார். இவருக்கு விலையுயர்ந்த கேடிஎம் பைக் வாங்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக அவர் தன்னுடைய உழைப்பினால் கிடைத்த பணத்தால் மட்டுமே பைக் வாங்க வேண்டும் … Read more

சாராயத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்.. 3 பேருக்கு டிசி வழங்கியது நிர்வாகம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையை ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார். அப்போது, அதில் சாராய பாக்கெட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அந்த மாணவரிடம் சாராயம் குறித்து விசாரணை நடத்தினார். இதில் அந்த மாணவர், தான் … Read more

கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வி!!

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் ரோஜர் பெடரர் (41). இவர் பாரம்பரியமிக்க விம்பியள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்துள்ளார். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர். அண்மையில் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறபோவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் … Read more

பசுமை தமிழகம் இயக்கம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுாரில், பசுமை தமிழகம் இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். வனத்துறை மூலம் தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல், பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டு, அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 33 சதவீதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 ஆண்டுகளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் … Read more

ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு..!

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க, தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை மாநில அரசு உயர்த்தி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 … Read more

மகாலட்சுமியுடன் கன்னித்தீவு.. விமான நிலையத்தில் ரவீந்தர் விளக்கம்..!

சமீபத்தில், ‘சன் டிவி’ புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்ட திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், கன்னித்தீவுக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். உடல் பருமனான திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை சின்னத்திரை நட்சத்திரம் ‘சன் டிவி’ புகழ் மகாலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டது திரையுலகினர் மட்டுமின்றி மகாலட்சுமியின் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது. இவர்களது திருமண செய்தியை சமூக ஊடங்களில் ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில், திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் … Read more

15 நாட்கள் இதெல்லாம் செய்யக்கூடாது.. திருச்சி கமிஷனர் அதிரடி உத்தரவு..!

திருச்சியில், இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது. இதுகுறித்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாநகரில் இன்று (செப்.24-ம் தேதி) முதல், வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது. பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41-ன் கீழ் இந்த தடை உத்தரவு … Read more

சாதி ரீதியான துன்புறுத்தல் – ஊராட்சி மன்ற தலைவர் புகார்!!

கரூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி தனக்கு சாதி ரீதியான துன்புறுத்தல் தரப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் தலா 5 பேர் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சி தலைவராக உள்ள சுதா பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். இந்த நிலையில் அவர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். … Read more