இலவச மருத்துவ சிகிச்சை பெற ரேஷன் கார்டு மட்டும் இருந்தால் போதும்…!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் நாடு முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். உங்களிடம் அந்தோதயா ரேஷன் அட்டை இருந்தாலே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு வாங்கிவிட்டால் போதும். ஆயுஷ்மான் கார்டு யாருக்கெல்லாம் கிடைக்கும்? அந்தோதயா ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். பொது சேவை மையங்கள் வாயிலாக இந்த கார்டு பெற விண்ணப்பிக்கலாம். மத்திய, … Read more

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: அனுமதி வழங்கியது சென்னை ஐகோர்ட்..!

தமிழகத்தில், 50-க்கும் அதிகமான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டி.ஜி.பி.க்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்காததால், அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்பது இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ‘மற்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு … Read more

தமிழ்நாட்டில் 1,267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி!!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஃப்ளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெரும்பாலான நகரங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இவற்றைத் தடுக்கும் வகையில் 1,000 இடங்களில் நேற்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் காய்ச்சலால் … Read more

மருத்துவர்களுக்கான உதவித் தொகை உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 1000 ரூபாயை, 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வறுமை நிலையை களைய உதவும் வகையில் அவர்களுக்கு மாதம் 500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது … Read more

மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!

தர்மபுரியில், வீடு காலி செய்யும் போது, எதிர்பாராத விதமாக பீரோ உரசி மின்சாரம் தாக்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு சொந்தமான வீட்டின் 2-வது மாடியில் இலீயாஸ், அவரது மனைவி சிராஜ் ஆகியோர் கடந்த 9 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை, இலீயாஸ் குடியிருந்த பச்சையப்பன் வீட்டியிலிருந்து கோல்டன் தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்கு … Read more

கள்ளகாதலுக்காக கரண்ட் ஷாக் கொடுத்து கணவனை கொன்ற மனைவி..!! கால் ரெக்கோர்டிங்கால் மாட்டி கொண்டார்.!!

உ.பி சேர்ந்தவர் மன்வேந்திரா. அவருக்கு மார்ச் 26ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் ஏப்.9ஆம் தேதி அவர் மின்சாரம் தாக்கி மயங்கிவிட்டதாக, அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் செப்.3 அன்று மன்வேந்திராவின் செல்போனை அவரது மருமகன் மனே பயன்படுத்திய போது ஓர் அதிர்ச்சிகரமான கால் ரெக்கார்டிங் சிக்கியுள்ளது. அதில் மன்வேந்திராவின் மனைவி … Read more

நடிகர் போண்டா மணியிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்..!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழ்த்திரையுலகின் நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. “படப்பிடிப்பின் போது சாக்கடை நீரில் விழுந்தேன். அந்த நீர் நுரையீரலில் தங்கி அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, … Read more

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்!

மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதன்முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் வாரத்துக்கு 2 பாடவேளைகளில் இணைக்கப்பட்டுள்ளன.   இசை, நடனம், காட்சிக் கலை, நாடகம், நாட்டுப்புறக் கலை உள்ளிட்ட கலை, பண்பாட்டு செயல்பாடுகள் இதில் அடக்கம். இதில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கலந்துகொள்ள வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் … Read more

நாளை முதல் அக்.5ம் தேதி வரை பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி..!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே 4500 அடி உயரத்தில் உள்ள மலையின் மீது பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.  இங்கு மாதந்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8  நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய  வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும் … Read more

குடும்பத் தகராறில் சோகம்.. மாமியார், மருமகள் தூக்கிட்டு தற்கொலை..!

புதுச்சேரி அருகே, குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலைக்கு முயன்றதில் மாமியார், மருமகள் இறந்தனர். கணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). இவரும், நாகை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஆனந்த், மனைவி சந்தியா மற்றும் தாயார் … Read more