9ஆவது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் ஒருநாள் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் … Read more

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு – 4 பேர் மீது குண்டாஸ்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி (34), பெரிய சிறுவத்தூரைச் சேர்ந்த ஷர்புதீன் (38), உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியத்தைச் சேர்ந்த மணி (44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லட்சாதிபதி வேலூர் மத்திய சிறையிலும்,  ஷர்புதீன், சரண்ராஜ், மணி ஆகியோர் கடலூர் மத்திய சிறைச்சாலையிலும் அடைப்பு காவலில் உள்ளனர். இவர்கள் வெளியே வந்தால் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் … Read more

மருத்துவப்படிப்பு… பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது என … Read more

மன உளைச்சலால் விபரீதம்.. வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை..!

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜா அய்யர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (73). இவருடைய மனைவி கங்காதேவி (63). இந்த தம்பதிக்கு ஜெயக்குமரன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஷாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். முதியவர் ஆனந்தன் பார்வை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவருடைய மனைவி கங்காதேவி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வயது முதிர்வு, உடல்நிலை குறைபாடு காரணமாக தம்பதிகள் … Read more

இனி, பணப்பலன் கிடையாது.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு..!

‘பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ‘பணியில் இருக்கும்போது முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட  அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்பட மாட்டாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் … Read more

வரும் 19 ஆம் தேதி இங்கிலாந்தில் பொது விடுமுறை..!!

பிரிட்டன் மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் .  இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணியாக அறிவிக்கப்பட்ட இவர் ஓராண்டு காலம் வரை அதிகாரப்பூர்வமாக பட்டம் ஏற்க வில்லை. பிரிட்டன் ராணி … Read more

தாய் கண் எதிரே சோகம்.. லாரி சக்கரத்தில் சிக்கி 12 வயது மகன் பலி..!

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் என்.எஸ்.கே.நகர் ராஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் பாலசூர்யா (12). இவர், மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவர் பாலசூர்யா தனது தாய் சாந்திமணியுடன் மணலியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வல்லூர் நான்கு வழி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது … Read more

இங்கிலாந்து மகாராணி மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராணி இரண்டாம் எலிசபெத் நம்முடைய காலத்தின் … Read more

சமூக வலைதளங்களில் விளம்பரம்.. பிரபலங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடு..!

தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சியால், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுபோல, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. இவைகளில் மோசடிகள் நடப்பதை தடுப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் நலத்துறை பல கட்டங்களாக ஆய்வுகள் செய்து, சில கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது. இவை, அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்று பிரபலமாக உள்ளோர் சமூக வலைதளங்களில் சில பொருட்களை வாங்கும்படி பரிந்துரை செய்கின்றனர். இவ்வாறு பரிந்துரைக்கும்போது, அந்த நிறுவனத்துடனான … Read more

கை மற்றும் கால் நரம்புகள் அறுப்பு.. தலைமை ஆசிரியை கொடூரமாக கொலை..!

திருப்பத்தூரில், தலைமை ஆசிரியையின் கை மற்றும் கால் நரம்புகளை அறுத்து கொடூரமாக  கொலை செய்து 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கான்பாநகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், காலை 9 மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்கம் சென்று … Read more