ஆகஸ்டில் ரூ.1.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்! ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வசூலும் மாதம்தோறும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 12-வது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வசூல் குறித்து கூறும்போது, ரூ.1,43,612 கோடி அளவுக்கு ஜிஎச்டி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாத … Read more

பரபரப்பு! அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு!!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க  உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் … Read more

கால்களுக்கு பதிலாக கொம்பு உருவத்துடன் பிறந்த அதிசயக் குழந்தை!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்பூர் மாவட்டத்தில் உள்ள மணிப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 26-ம் தேதி அதிசயக்குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. இரு கால்கள் இல்லாமல் பிறந்த அந்த குழந்தை பெற்றோரை குழப்பத்தில் ஆழ்த்தியதுடன் மருத்துவர்களையும் குழப்பமடைய வைத்துள்ளது. கால்களுக்கு பதிலாக கொம்பு போன்ற அமைப்பு நீண்டு இருப்பதே இந்த குழப்பத்திற்கு காரணம் ஆகும். அந்த குழந்தை போதிய வளர்ச்சி அடையாமல் 1 கிலோ 400 கிராம் மட்டுமே எடை கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை … Read more

72 மணி நேரத்தில் 3 காவலாளிகள் கொலை.. சைக்கோ கில்லருக்கு போலீஸ் வலை..!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கடந்த 72 மணி நேரத்தில் மூன்று காவலாளிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 பேரில், முதல் காவலாளி சாகர் மாவட்டத்தின் தொழிற்சாலை ஒன்றின் வெளியே படுத்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவரை, சுத்தியலால் கடுமையாக தாக்கி படுகொலை செய்து விட்டு கொலையாளி தப்பியுள்ளார். இரண்டாவது காவலாளி அதே மாவட்டத்தின் கலை மற்றும் வர்த்தக கல்லூரியில் வேலை செய்து வந்துள்ளார். அவர், பெரிய … Read more

தமிழகத்தில் போதைப்பொருள்.. மத்திய அரசே காரணம்.. சொல்கிறார் அமைச்சர் பொன்முடி..!

தமிழகத்தில் போதைப்பொருள் இந்த அளவு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது; “மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. மத்திய அரசு இதுவரை போதைப்பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் போதைப் பொருள் இந்த அளவு பரவி உள்ளது. பிரதமர் மோடியின் … Read more

50 பேரை மயக்கி பணம், செல்போன் பறிப்பு.. கைதான வடமாநில கும்பல் பற்றி பரபரப்பு தகவல்..!

திருப்பூர் குமரன் சிலை அருகே கடந்த 19-ம் தேதி சவுதப் சவுத்திரி (26) என்பவர் மயங்கிய நிலையில் கிடந்தார். ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்தவர் என்பதும், ஊருக்கு செல்வதற்காக கடந்த 16-ம் தேதி ரயில் நிலையத்துக்கு வந்த போது அவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் பேச்சுக் கொடுத்து பிஸ்கட் சாப்பிட வைத்துள்ளனர். அதை சாப்பிட்டு மயங்கியவரிடம் இருந்து … Read more

சமூக வலைதளம் மூலம் கிடைத்த நட்பை நம்பியவருக்கு நேர்ந்த அவலம் பாருங்க ..!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் தொழில் அதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவு என்ற இளம் பெண்ணுடன் திடீரென்று பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து போனில் பேசுவது, வீடியோ கால் செய்வது என தங்களது நட்பை அதிகரித்துள்ளனர். இதன் விளைவாக தொழில் அதிபரிடம் அந்த பெண் தனது கணவர் துபாயில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னை தனிமையில் வந்து சந்தியுங்கள் என்று ஆசை வார்த்தை பேசியுள்ளார். அதை நம்பிய … Read more

இப்படி கூட நடக்குமா..!! தேர்வில் ஃபெயில் போட்ட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில் பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கணித ஆசிரியர் சுமன்குமார் மற்றும் பள்ளி அலுவலர் சோனேராம் சவுரே ஆகிய இருவரையும் பள்ளி … Read more

இசையால் 55 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்!!

18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர், இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு பிடிக்கவே, அவரிடம் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது. இவரும் முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் … Read more

மாணவி ஸ்ரீமதி மரணம்.. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவருடைய தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், ‘இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும்; கலவரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மாணவி இறப்பு குறித்து ஊடக விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்ட பின்னும், சில … Read more