#BIG NEWS:- தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கனடா கவுரவம்.. நன்றி தெரிவித்து ரஹ்மான் உருக்கம்..!

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை, கனடா நாட்டின் மார்கம் என்ற நகரில் உள்ள ஒரு தெருவுக்கு சூட்டியிருக்கிறார் அந்த நகரின் மேயர். இந்த சம்பவம், இந்திய ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். pic.twitter.com/m0DfPUlx9b — A.R.Rahman (@arrahman) August 29, 2022 அதில், “என் வாழ்க்கையில் இதனை நான் கற்பனை கூட செய்ததில்லை. இதற்காக மார்கம் மேயர், கனடாவின் இந்திய தூதர் மற்றும் கனடா … Read more

நான் மத்திய உளவுத்துறை போலீஸ்.. திமுக பிரமுகரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் சம்பத் (49). திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். சம்பத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘நான் மத்திய உளவுத்துறை போலீஸ். நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்துள்ளது. நீங்கள் வருமானம் குறித்த கணக்கு காட்டாமல் உள்ளீர்கள். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை … Read more

பாதுகாப்புக்காக பீரோவில் மின் இணைப்பு.. மறந்து தொட்ட மூதாட்டி பரிதாப பலி..!

சீர்காழி அருகே, வீட்டின் பாதுகாப்புக்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானியர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில், குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக … Read more

கறிக்குழம்பை கடாசிய கணவர்.. மனவேதனையில் மனைவி தற்கொலை..!

சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் மனவேதனை அடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரை அடுத்த சிவன்படபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் கீதா(26) என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கீதா ஆட்டுக்கறி குழம்பு சமைத்து வைத்திருந்தார். மதியம் கணவருக்கு அதை பறிமாறினார். அப்போது குழம்பு … Read more

இனி தகுதித்தேர்வில் தமிழ் கட்டாயம்!!

தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்னும் முறை … Read more

ஒரே மாதத்தில் 60 லட்சம் பேருக்கு கொரோனா!!

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 2,61,290 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,000ஐ நெருங்கியுள்ளது. ஜப்பானில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஆளான 15 லட்சம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கவலைக்குரிய … Read more

வீட்டில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிமினி வயல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன் – லட்சுமி தம்பதிக்கு சரஸ்வதி, பிரியா (வயது 21) என்ற மகள்களும், லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பிரியா ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பமான அவர் 7 மாதத்தில், இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பிரியா உடலை கைப்பற்றி விசாரணை … Read more

தக்காளி காய்ச்சல் – எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில … Read more

பயங்கரவாத அச்சுறுத்தல் – பாதுகாப்பு அதிகரிப்பு!!

மும்பை அருகே ராய்காட் கடலில் கடந்த வியாழக்கிழமை ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என்று மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல்கள் வந்தன. அதில் 2008ஆம் ஆண்டு நடந்ததை போல மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் … Read more

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள்.. ராகுல், பிரியங்கா மரியாதை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (20-ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களைத் … Read more