ஃபெடரல் வங்கி கொள்ளையில் திருப்பம்..!! 18 கிலோ நகைகள் மீட்பு

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது. மேலும், அதே வங்கி கிளையில் பணியாற்றும் ஊழியர் முருகன் என்பவர் தனது … Read more

குடியாத்தம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..!! தொடரும் சோகம்..!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் அரகொண்டாவில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் நேற்று முன்தினம் விடுதிக்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.  அப்போது அவர், கல்லூரி பெண் முதல்வர், தனது தேர்ச்சி சதவீதத்தை குறைத்துவிடுவதாக … Read more

துணை மருத்துவ படிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

தமிழகத்தில், 2022 – 2023-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி. நர்சிங், பி.பார்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. அதேபோல், பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது, இம்மாதம் 1-ம் தேதி துவங்கியது. இதுவரை, 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்; 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். … Read more

ஆவின் பால் பாக்கெட்களில்.. அமைச்சர் சொன்ன தகவல்..!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக் கொடி சின்னம் பதித்து விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். திருவள்ளூரில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனியார் பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்த வில்லை என பால் முகவர் பொன்னுசாமி கூறியுள்ளார். பொன்னுசாமி, சங்கத் தலைவரே கிடையாது. அவர் கேள்வி கேட்கவே தகுதி … Read more

இவர்களுக்கும் ஓய்வூதியம்.. தமாகா தலைவர் கோரிக்கை..!

“தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில், தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் … Read more

30 வருஷமா ஒரே பேச்சு தான்.. ரஜினியை கலாய்த்த கடம்பூர் ராஜூ..!

தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த செய்தியை பார்த்தேன். ஊடகத்தில் அவர் பேட்டி அளிக்கும் போது கூட நாங்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தாலும், அரசியலும் பேசினோம் என்று சொல்லி இருக்கிறார். அரசியலுக்கு வருவது என்பது தனிப்பட்ட நபர்களுடைய விருப்பம். நடிகர் ரஜினிகாந்த் இன்றைக்கு அல்ல, 1996-ல் அன்றைக்கு ஆளுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அவர் கருத்துக்களை தெரிவித்தார். அதற்குப் … Read more

மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது..!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேலும் ஊட்டியில், அருகே உள்ள கிளென் மார்கன் அணை அதன், முழு கொள்ளளவை எட்டியதால், அணையிலிருந்து சுமார் 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மசினகுடி தரைப்பாலம் முழுவதும்  மூழ்கியுள்ளது. இதனால், அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை ..!!

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ (Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நமது தேசப்பற்றை பறை சாற்றும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்ஷா அணை தேசியக்கொடி நிறத்தில் தற்போது ஒளிர ஆரம்பித்திருப்பது நாட்டு மக்களின் மனதில் தேசபக்தி உணர்வைத் தூண்டும் வகையில் உள்ளது. பாட்சா அணை தேசிய கொடி வண்ணத்தில் ஒளிரும் வீடியோவை … Read more

ஏன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும்?

ஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? வாக்காளர் பட்டியலை, 100 சதவீதம் துாய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக, ஆதாரை இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது. வாக்காளர்களின் ஆதார் விபரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் பாதுகாக்கப்படும். மேலும், போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும். … Read more

ஒரே ஒரு நொடி தான்… சிறு கவனக்குறைவால் நிறுத்தி வைகப்பட்ட லாரி நகர்ந்து 4 வயது சிறுவன் பலி!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் (36). இவர் ஓட்டுநராக பணிபுரிகிறார். இவரது மகன் ரித்திஷ் (4).  இந்த நிலையில், நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது. அந்த லாரி வந்த போது கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கருணாகரன் … Read more