#BIG NEWS:-பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம்.. மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!

வீடுகளில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க விரும்புவோருக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. சூரியசக்தி மின் … Read more

தமிழகத்தில் இதுவே முதல் முறை.. தங்கப் பொருள் கண்டுபிடிப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், 15-க்கும் அதிகமான குழிகள் அமைக்கப்பட்டு, அதில் 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு நடைபெறும் அகழாய்வுப் பணியில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், பழங்கால … Read more

16 நாட்களுக்கு பிறகு கீழச்சேரி பள்ளி திறப்பு.. ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கினர்..!

திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது. திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவி சரளா (17) கடந்த மாதம் 25ம் தேதி காலை விடுதி அறையின் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. … Read more

2 மாத இடைவெளியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று..!!

 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே, கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.  இரண்டு மாத … Read more

சாதி, மத மோதல்களுக்கு காரணம் இது தான்.. சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்காக அடிமையாகிறவர்களின் தொகையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது கவலையும் வருத்தமும் கூடவே செய்கிறது. கடந்த ஆட்சியில் இது பற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டதன் காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று … Read more

திருமணம் ஆனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 பென்ஷன்.. எப்படி தெரியுமா..?

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டமானது அமைப்புசாரா தொழிலாளர்களாகப் பணிபுரியும் நபர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்கிடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் இந்தத் திட்டம் வருகிறது. திருமணமான தம்பதியர் இந்த திட்டத்தில் இணையும் பட்சத்தில், ஓய்வு காலத்தில் அவர்கள் ஆண்டுதோறும் ரூ.72,000 ஓய்வூதியமாக பெற முடியும். வீட்டு வேலை … Read more

துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமைச்சருக்கு ஓராண்டு சிறை..!!

உத்தர பிரதேச அரசில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக ராகேஷ் சச்சன் பதவி வகிக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டில் அவரது வீட்டில் இருந்து உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 31 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அவர், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு வழங்கி கான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சராக இருப்பவர் … Read more

குறைந்த விலை.. கூடுதல் வசதி.. நோக்கியாவின் புதிய அறிமுகம்..!

‘நோக்கியா’ பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள ‘எச்.எம்.டி. குளோபல்’ நிறுவனம், ‘நோக்கியா 8210’ எனும் 4ஜி பியூச்சர் போன் மற்றும் ‘நோக்கியா 110 (2022)’ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 8210 சிறப்பம்சம்: * இரண்டு நானோ சிம்கள் * 2.8 அங்குல டிஸ்ப்ளே * 128 எம்.பி. ரேம் * 48 எம்.பி. சேமிப்பகம் * 32 ஜி.பி. வரை அதிகரிக்கலாம் * 0.3 எம்.பி. கேமரா சென்சார் * எப்.எம். ரேடியோ * எம்.பி.3 … Read more

திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.. திருத்தணியில் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ.நகர் பகுதியில் வசித்து வந்தவர் மோகன். திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று பேர் மோகனை வழிமறித்து முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மோகன் குறித்து அவருடைய உறவினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மோகன் திருத்தணி அரசு … Read more

பெரும் அதிர்ச்சி.. பாஜக தலைவர் தற்கொலை..!

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் நேற்று அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என போலீசார் உறுதி செய்துள்ளனர். ஆனால், தற்கொலைக்கான காரணம் என்னவென்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் தற்கொலை கடிதம் குறிப்புகள் எதுவும் சிக்கவில்லை. சில நாட்களாக அந்த இல்லத்தில் தான் அவர் வசித்து வந்துள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், … Read more