'ஆன்லைனில்' திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது..!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26-ம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தாரர்களின் … Read more

'ஆன்லைனில்' திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது..!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26-ம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தாரர்களின் … Read more

#BIG NEWS:- மாணவர்களுக்கு சிற்றுண்டி.. முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!

தமிழக அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளி மாணவ – மாணவியர்களிடையே மனநல மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; “மாணவர்கள் … Read more

தொடரும் சோகம்..!! சிவகாசியில் பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய +1 மாணவி திடீர் தற்கொலை… !!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது இளைய மகள் யோகலட்சுமி (17). இவர் பாரைப்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற யோகலட்சுமி, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடலை கைப்பற்றி மாரனேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

மக்களே கவனம்.. ஆசை காட்டி மோசடி.. நிதி நிறுவனத்தில் சோதனை..!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று, வங்கிகளில் அளிக்கப்படும் வட்டியை விட 3 மடங்கு அதிகமாக வட்டி அளிப்பதாகக் கூறியதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பணத்தை இந்த நிறுவனத்தில் செலுத்தி அதற்கான வட்டியும் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு முறையாக வட்டி கொடுக்காமலும், செலுத்திய பணத்தையும் திரும்பத் தராமலும் பல்வேறு காரணங்களைக் கூறி நிதி நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், பொருளாதாரக் குற்றத் … Read more

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!! வரும் 1 ஆம் தேதிக்கு மாற்றம்.!!

ஒருங்‌கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி  விண்ணப்பங்களைக்‌ கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ விவரங்கள்‌ கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளராகியபணிகளுக்கான இரண்டாம் கட்ட அசல் … Read more

7வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கோரிக்கை ஏற்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனால், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் தங்கியிருந்தார். கடந்த … Read more

கென்யாவில் நடந்த கோர விபத்து.. 30 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்று முன்தினம் மாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து மெரு-நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆற்றுபாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பேருந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர், 20-க்கும் … Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விலையில்லா சைக்கிள்!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே போல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுகின்றன. கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. … Read more

இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28ஆம் தேதி நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இன்று முதல் 30ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் … Read more