போராட்டம் மற்றும் வன்முறை.. ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு..!

முப்படைகளில் நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரயில் … Read more

தமிழ்நாட்டில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12-ம் தேதி வரை தேர்வு..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை பயிண்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வருடம் சரியான தேதியில் பள்ளிகள் ஆரம்பித்திருப்பதால், முன்பிருந்தது போலவே பருவ தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளி … Read more

சிபிஎஸ்இ தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி..!!

2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்த முடிவுசெய்தது. அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மரியா டிராகி!!

இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகிறன்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் மரியா டிராகிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெருன்பான்மை இல்லாததால் இன்று மரியோ டிராகி அதிபர் செர்ஜியோ மாட்ரெல்லா முன்னிலையில்  தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், … Read more

எருமை திறந்து வைத்த பேருந்து நிழற்குடை.. காரணம் என்ன தெரியுமா..?

கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தில் உள்ள பலேஹோசூரில் புதிய பேருந்து நிறுத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனம் ஈர்க்கும் வகையில், தென்னை ஓலைகளை வைத்து தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைத்தனர். இந்த நிறுத்தத்தை எருமையை வைத்து, ரிப்பன் வெட்டி திறந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சுமார் 40 … Read more

19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. இதுல உங்க மாவட்டம் இருக்கா..?

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (21-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், … Read more

அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை திடீர் உயர்வு..!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாயும், ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

கவனம்.. தமிழக இளைஞர்களை வட்டமிடும் வடமாநில மோசடி கும்பல் !

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மேல்மருவத்தூர் லட்சுமி நகரில் சக்தி நாதன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு, வேலை இல்லாத காரணத்திற்காக Naukri என்ற இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்திருந்தார். இந்நிலையில், அதில் இருந்து சக்தி நாதன் முகவரிக்கு போலந்து நாட்டில் வேலை அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துள்ளது. இதனை நம்பிய அவர், அதில் தொடர்புடைய நபரிடம் பேசியுள்ளார். அவர்கள் கூறியப்படி சக்தி நாதன் சுமார் 7,14,035 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அவர்களை தொடர்பு … Read more

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு.. 2 குற்றவாளிகளை என்கவுண்டர் !!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அம்மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆம் ஆத்மி அரசு அமைந்தது. இதையடுத்து சித்து மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து அடுத்து சில நாட்களிலேயே, அதாவது கடந்த மே 29ம் தேதி சித்து மூஸ்வாலா … Read more

மாணவி 12ஆம் தேதி இரவே மாடிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறுகின்றனர். இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில்  ஈடுபட்டது தொடர்பாக இதுவரை … Read more