கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை!! அரியலூரில் பரபரப்பு..!!

தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூர் ரயில்வே காலனியை சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு நிஷாந்தி என்ற மகளும் நிஷாந்த் … Read more

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு நேர்காணல் நடந்தது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் … Read more

ஒரே நொடி தான்… கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் (42). இவர், மனைவி மற்றும் 9 வயது மகள் ஸ்ருதி, 6 வயது மகன் ஷ்ரேயஸ் ஆகியோருடன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்தார். அங்கு விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி, விடுமுறையை கொண்டாட, குடும்பத்துடன் ஓமன் நாட்டிற்கு சென்றார். ஓமன் கடற்கரை ஓரம் உள்ள பாறையில், குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார். அப்போது, மிக ஆக்ரோஷமாக வந்த ராட்சத அலைகள், பாறையின் மீது … Read more

தாழ்ந்த சாதி எது? – சேலம் பெரியார் பல்கலை. தேர்வில் கேட்ட கேள்வியால் சர்ச்சை !

தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு மாணவர்களுக்குதேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனிடையே இந்த கேள்வி தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தமிழகத்தில் இருந்து பல்வேறு … Read more

மகளிர் கல்லூரியில் 2,000 புத்தகங்கள், 20 மின் விசிறி திருடிய இளைஞர்கள் !!

சென்னை பிராட்வே சாலையில் பாரதி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சென்னையில் செயல்படும் கல்லூரிகளில் பிரதான கல்லூரிகளில் இதுவும் ஒன்று. ஏராளமான மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு வருகையை தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அப்போது, கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரி நேரடியாக இயங்காமல் இருந்ததை பயன்படுத்தி, கல்லூரி வளாகத்தில் இருந்த 85க்கும் மேற்பட்ட மின்விசிறி … Read more

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு..!

முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று புஷ்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி … Read more

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் தமிழர் மரணம்..?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றிரவு சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) என்பவர் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்க, வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

பள்ளி மாணவா்கள் இவைகளை அணிந்து வரத் தடை.. நிபந்தனைகளை விதித்த அரசு !!

பள்ளி மாணவா்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் கைகளில் சாதி கயிறு கட்டிக்கொண்டு வருகின்றனர். தலைமுடியை நீளமாக வளர்க்கின்றனர் போன்ற புகார்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் ஒழுக்கம் தவறுவதுடன் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது தொடா்பாக, சமூக பாதுகாப்பு துறை சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவ, மாணவிகள் … Read more

இது என்ன கொடுமை? அரிசிக்கு 5% ஜிஎஸ்டியா !

அரிசி, தானியங்களுக்கு 5 % ஜிஎஸ்டி விதிப்பை கண்டித்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லறை விற்பனையாளா்கள் போராட்டம் அறிவித்துள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் நெல் அரிசி வணிகா் சங்கங்களின் சம்மேளன மாநில தலைவா் டி.துளசிலிங்கம் கூறியது, பஞ்சாப் மாநிலம், சண்டீகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட பிராண்டுக்கு மட்டுமே … Read more

கருமுட்டை விற்பனை.. 2 மருத்துவமனைகள் மூடல்.. அமைச்சர் அதிரடி..!

ஈரோட்டில், சிறுமியின் கருமுட்டையை தானம் என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலி என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி … Read more