தமிழகத்தின் முக்கிய பிரபலமும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஊரான் அடிகள் காலமானார்..!!

சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர் ஊரான் அடிகள். திருச்சி மாவட்டம் சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் பிறந்த இவர், 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். இவர் தமது இருபத்திரண்டாம் வயதில் “சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்” நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்து பல்வேறு சமய நூல்களை … Read more

நீலகிரியில் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் இலவச எண் அறிவிப்பு..!!

கடந்த 15 நாட்களாகவே தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மழை காரணமாக ஊட்டி, கூடலூர், … Read more

1 முதல் 5-ம் வகுப்பு வரை.. காலை 8.45 மணிக்குள்.. அரசு உத்தரவு..!

தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது. அதன்படி, காலை 5.30 முதல் 7. 45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் உள்ள 292 … Read more

குப்பையை பிரித்து கொடுத்தால் டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ்.. மேயர் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டு ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். பின்னர், தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக் … Read more

மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் பலி.. சோகத்தில் கிராம மக்கள்..!

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம் ஹவர்கேடா – நந்த்கிர்வாட் கிராமத்தின் இடையே உள்ள உயரழுத்த மின் கம்பியில் பழுது நீக்கும் பணி பிற்பகல் 3 மணி அளவில் நடந்தது. இந்த பணியில், கணேஷ் தீட் (30), ஜெகதீஷ் முர்குண்டே (35), பாரத் வர்கட் (32) மற்றும் அர்ஜுன் மகர் ஆகிய மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, மின் கம்பியில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் 4 ஊழியர்களையும் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி தூக்கி வீசப்பட்ட … Read more

ஒரு பக்கம் எதிர்ப்பு.. மறுபக்கம் அக்னிபாத் திட்டத்தில் சேர இத்தனை லட்ச இளைஞர்கள் விண்ணப்பம் !!

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர நாடு முழுவதும் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்திய ராணுவத்தில் 17 முதல் 21 வயதுள்ள இளைஞர்களை பயன்படுத்திக் கொள்வதற்காக, அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம் மூலம் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதன்பின்னர் அவர்களில் 25% பேர் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்றவர்களுக்கு ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரை ரொக்கம் வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது. எனினும், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து … Read more

சமையல் எண்ணெய் விலை மேலும் ரூ.10 குறைகிறது?

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம் இறக்குமதியை தான் நம்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை  அதிகரித்து வந்ததால் இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்து வந்தது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிரமத்தைத எதிர்கொண்டனர். மேலும் விலையை குறைக்க கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், சமீபகாலமாக சமையல் எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம்  லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 … Read more

‘தல’ தோனிக்கு 41 அடி உயர கட் அவுட்- ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41ஆவது பிறந்த நாள். இதனால் சமூக வலைத்தளங்களை திறந்தாலே தல தோனி தான் தெறிக்கவிடுகிறார்.  கேப்டன்ஷிப்பில் தனித்திறமை, உலக அளவில் சிறந்த பினிஷர் உள்பட கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். இதனால் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இதற்கு மேலாக அவருக்கு 41 வயதான நிலையில், அதே உயரத்தில் கட்அவுட் வைத்து பிரமிக்கவைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். நடிகர்களுக்குத்தான் கட் அவுட் வைக்க வேண்டுமா என்ன? இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை … Read more

வயிற்றில் இருந்து 233 பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!!

துருக்கியை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்த 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். துருக்கியை சேர்ந்த ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுக்கசொல்லியுள்ளனர். அவரும் எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுத்து அவற்றை மருத்துவரிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவரது வயிற்றில், பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், … Read more

ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் ரவுடி வெட்டிக் கொலை!!

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் பிரபல ரடிவு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டார் (எ) சக்திவேல் (35) மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 2021 நவம்பர் மாதம் கைதாகி மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு ஜாமீனில் வெளியே வந்த அவர், … Read more