அதிர்ச்சி! ரயிலில் ஒரு டீயின் விலை ரூ.20… சர்வீஸ் சார்ஜ் ரூ.50!!

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியதற்கு IRCTC 70 ரூபாய்க்கு பில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சதாப்தி ரயிலில் கடந்த ஜூன் 28ஆம் தேதி பயணித்த பயணி ஒருவர் ரயிலில் டீ வாங்கினார். அந்த தேநீரின் விலை வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதற்காக விதிக்கப்பட்ட சேவைவரி (service charge) 50 ரூபாய் என ரயில்வே ஊழியர் கொடுத்த ரசீதில் குறிப்பிட்டுள்ளதை கண்டு அந்த பயணி … Read more

இன்று புதிய தொழிலாளர் விதிகள் அமல்… வாரம் 3 நாள் விடுமுறை!!

புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் … Read more

சென்னை மக்களுக்கு ஷாக் நியூஸ்… வாகனங்களை நிறுத்த கட்டணம் உயர்வு..!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடந்தது. பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் நடைபெறும் 2-வது மன்ற கூட்டம் இதுவாகும். மன்ற கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், பொறுப்பு கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நேற்றைய கூட்டத்தில் நேரமில்லா நேரம் … Read more

முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே..!

மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். இதற்கிடையே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் உள்ள பாஜக, சிவசேனா … Read more

படிக்கிற வயசுல இது தேவையா..!! பேருந்தின் கூரைமீது நடனமாடிய பள்ளி மாணவர் படுகாயம்..!!

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கொளத்தூர், பெரியார் நகருக்கு நேற்று மாலை ஒரு மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சம்பத் (53), மாதவரம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (42) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர். பேருந்து பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை அருகே சென்றபோது, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். இதில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த … Read more

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (30-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை மாவட்டம்: சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், eb காலனி, காந்திநகர், செல்வவிநாயகர் நகர், கண்ணதாசன் வீதி, விவேகானந்தர் வீதி, சங்கிலி கோனார் தோட்டம், சுண்ட பாளையம், சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், eb காலனி, காந்திநகர், … Read more

இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் விடுமுறை

கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் உள்பட 7 பேர் படுகொலை மதுரை மாவட்டம் மேலூா் மேலவளவு கிராமத்தில் படுகொலை செய்ப்பட்டனர். அவர்கள் புதைக்கப்பட்ட பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் விடுதலைக்களம் என்ற நினைவு மண்டபத்தையும், ஊராட்சித் தலைவா் முருகேசன் அரை வடிவ உருவச்சிலையையும் நிறுவி இருக்கின்றனர். இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். அதன்படி … Read more

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த … Read more

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்..!! அடுத்த சில நிமிடங்களில் மழை..!!

கிராமங்களில் மழை பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு திருமணம் செய்து மழை வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்நிலையில், அரப்பனஹள்ளி நகரில் கழுதைகள் திருமணம் நடந்தது. திருமணத்தின் பின்னர் பெய்த மழை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல பாதிப்புகளை சந்தித்தது. தொடர்ந்து கர்நாடகத்தில் பல பகுதிகளில் கன மழை சில சேதங்களை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக வட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை … Read more

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே!!

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு இன்று பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதி உத்தரவுக்கு … Read more