கொரோனா பரவல் – மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, நேற்று 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,33,345 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 11,574 பேர் குணமடைந்தனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,08,666 ஆக … Read more

பாலியல் புகார் – கானா இசையமைப்பாளர் கைது!!

ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியே, காதலியை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தானும், தன் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு கானா பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் தனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் … Read more

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் எப்போது ? அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக உள்ள பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 5-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

எம்பிசி வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!

மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும், இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது … Read more

பிரபல இந்திய ஹாக்கி ஜாம்பவான் வரீந்தர் சிங் காலமானார்..!!

முன்னாள் வீரரான வரீந்தர் சிங் 1972-ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் அணியில் அங்கம் வகித்துள்ளார். இதே போல் 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் வரீந்தர் சிங் முக்கிய வீரராக இருந்தார். 1973-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் வரீந்தர் சிங் இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். இது மட்டுமல்லாமல் 1974 மற்றும் … Read more

கருமுட்டை விற்பனை விவகாரம்.. பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி..!

ஈரோட்டில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது  சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமியின் தாய் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் என சொல்லப்படும் சையத் அலி, புரோக்கர் மாலதி என 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர், சிறுமிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த 16 … Read more

கவரிங்காக மாறிய தங்கம்.. அம்மன் கோவிலில் அதிசயம்..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து 5 சவரன் தங்கச் செயின் மற்றும் தாலி வாங்கி இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலைக்கு அணிவித்தனர். அதன்பிறகு அந்த நகைகள் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையின் பீரோவில்  பத்திரமாக வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது … Read more

வெளியானது குரூப்-1 தேர்வு முடிவு.. உள்ளே இருக்கு முழு விவரம்..!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx  வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி … Read more

வெளியானது குரூப்-1 தேர்வு முடிவு.. உள்ளே இருக்கு முழு விவரம்..!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx  வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி … Read more

புதிய கௌரவம்.. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் நடிகர் சூர்யா தேர்வு !!

ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார்.  அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 … Read more