ஒற்றைத் தலைமை வேண்டுமா? – பேச்சுவார்த்தையில் கறார் காட்டும் ஓபிஎஸ் !!

ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியில் இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத கட்சி அதிமுக. தற்போது புதிய பிரச்சனையாக வெளிப்படையாக வெடித்துள்ளது ஒற்றைத் தலைமை விவகாரம். வரும் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில், கட்சியில் இரட்டை தலைமையை நீக்கிவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இதற்கு எடப்படி … Read more

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்த பொறியாளர்..!!

 மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கடந்த 1995-ம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டு விடைபெற்றது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகமானதில் இருந்து வங்கிகள், ஐடி நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக இருந்தது. 2005-ம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது. அதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த முடிவை மைக்ரோசாப்ட் … Read more

திண்டுக்கல்லில் பரபரப்பு..!! ஆட்டோவை முந்தும் போது வேனில் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (21) என்பவர் அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று (ஜூன் 17) தனது இருசக்கர வாகனத்தில், பழனி அரசு மருத்துவமனையின் பின்பக்க நுழைவாயில் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னே சென்ற ஆட்டோ ஒன்றை முந்திச் செல்ல முயன்ற மனோஜ், எதிரே வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. … Read more

#BIG NEWS:- நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய, கடந்த 2018 செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல், தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி, சென்னை … Read more

மீண்டும் உயர தொடங்கியது தங்கத்தின் விலை..!! இன்றைய நிலவரம் என்ன ?

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து, ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது Source link

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

‛அண்ணாத்த’ திரைப்படத்திற்கு பின் ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தற்போது இந்தப் படத்திற்கான திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த் உட்பட நெல்சன் பட நடிகர்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்களாம். இந்நிலையில் இந்த படத்தின் கதை ஜெயில் தொடர்புடையது என்றும், அதனால் படத்திற்கு ஜெயிலர் … Read more

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் காலமானார்..!

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பி.கே.இளமாறன். இவர், கொடுங்கையூர் அரசுப் பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அத்துடன், தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வந்தார்.இந்நிலையில், இன்று (17-ம் தேதி) காலை அவர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆசிரியர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். Source … Read more

நொடி பொழுதில் பஸ்முன் பாய்ந்த ட்ராஃபிக் போலீசால் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை..!!

உத்தரகண்ட் மாநிலத்தில் வழக்கம் போல் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு ரிக்‌ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வளைவில் ரிக்‌ஷா வேகமாக திரும்பியபோது தாயின் மடியில் இருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தது.  அப்போது அங்கு போக்குவரத்தை சீரமைப்புக்கும் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் சுந்தர் சர்மா, பேருந்து ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சிடைந்தார். உடனடியாக ஓடிச்சென்று கையைக் போட்டு பேருந்தை நிறுத்தும்படி சேகை காட்டினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பேருந்து … Read more

திரைப்படத்தில் வருவது போல் கனடா பிரதமரை கொல்ல ஆயுதங்களுடன் சென்ற நடிகர்..!!

புகழ்பெற்ற திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளவரான கனடா நடிகரான ரியான் கிரந்தம் (24) என்பவர், 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ம் தேதி, வீட்டில் பியானோ வாசித்துக்கொண்டிருந்த தன் தாய் பார்பரா வெயிட் (64) என்பவரை, பின்னால் இருந்து தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனைத் தொடர்ந்து, மறுநாள் மூன்று துப்பாக்கிகள், குண்டுகள், பெட்ரோல் குண்டுகள் முதலான ஆயுதங்களுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கொல்லும் நோக்கத்துடன், ரியான் அவரது வீட்டை நோக்கிப் புறப்பட்டுள்ளார். பின்னர் தானாகவே போலீசாரிடம் சரணடைந்துள்ளார். … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – இன்று மனுத்தாக்கல் தொடக்கம்!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி முடிகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. … Read more