53 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. 3 பேர் வெறிச்செயல் !!

தூங்கிக்கொண்டிருந்த 53 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கிர்வான் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அந்த வீட்டின் சுவர் ஏறி குதித்த 3 பேர் கொண்ட கும்பல் தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். … Read more

பேரணியில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு.. போலீசார் தாக்கியதாக புகார்

டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். இந்த விசாரணை முழுக்க முழுக்க உள்நோக்கம் … Read more

2ஆவது போட்டியிலும் கோட்டைவிட்ட இந்தியா!!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், 4 தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 21 பந்துகளில் 34 … Read more

கொடுங்கையூர் லாக் அப் மரணம் – 5 காவலர்கள் சஸ்பெண்ட்!!

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் லாக் அப் மரணம் என்பது தொடர்கதையாகி வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு சிறை மரணம் குறைவதாக இல்லை. அண்மையில் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் விசாரணையின் போது உயிரிழந்தார். அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒரு உயிரிழந்துள்ளார். விசாரணை கைதி ராஜசேகர் என்பவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை … Read more

அதிர்ச்சி! பைக் ரேஸால் பறிபோன பெண்ணின் உயிர்!!

சென்னையை அடுத்த முடிச்சூரை சேர்ந்த விஸ்வா என்பவர்  தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து தாம்பரம் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ் சென்றுள்ளார். அனைவரும் சாலையில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியுள்ளனர். இதில் அப்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக … Read more

அடுத்த அலைக்கு ஆயத்தமாகிறதா சீனா!?

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஏற்பட உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பீஜிங்கில் தொற்று எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. அதைக் கட்டுப்படுத்த சீன அரசு ஊரடங்கு, உள்ளிட்டக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. இதனால் 2 வாரங்களுக்கு முன்னிருந்து பீஜிங் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பீஜிங்கில்   வணிக சந்தைகள் அதிகம் காணப்படும் சாயோயாங் பகுதியில் … Read more

போராட்டக்காரர்களை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ.. அகிலேஷ் யாதவ் கேள்வி ?

முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தினர் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர்.  ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நிகழ்ந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த மோதலின்போது கற்கள் வீசப்பட்டன. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். மேலும் போராடிய நூற்றுக்கணக்கானோர் கைது … Read more

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவால் இந்தியாவுக்கே புகழ்.. குவியும் பாராட்டு !

நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடர் முழுவதும் அபாரமாக ஆடிவந்த பிரக்ஞானந்தா இந்தியாவின் பிரணீத்தை எதிர்கொண்டார். கருப்பு நிறக் காய்களில் அசத்திய பிரக்ஞானந்தா 49ஆவது நகர்த்தலில் வெற்றிபெற்றார்.  இதன் மூலம் ஒட்டுமொத்த 9 சுற்றுகளில் 6 வெற்றி, 3 டிரா என்று தோல்வி காணாத பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.2.59 … Read more

#BIG BREAKING:- முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தியே !!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 2016ம் ஆண் முதல் துபாயில் வசித்து வருகிறார். நரம்பு தளர்ச்சி நோயால் அவதிப்பட்ட வந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் காலமானதாக வெளியான செய்திக்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர். முஷாரப் வெண்டிலேட்டரில் வைக்கப்படவில்லை … Read more

வேலை செய்யும் இடத்தில் கால் தடுமாறி இரும்பு குழம்பில் விழுந்த தந்தை..!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் மேப்பிள்டன் ஃபுவண்டரி என்ற இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளி ஒருவர் கிட்டத்தட்ட 1,500 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் உருகிய இரும்பு தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 39 வயதான ஸ்டீவன் டியர்க்ஸ் என்பவருக்கு ஜெசிக்கா ஷட்டர் என்ற மனைவியும், 12, 5 மற்றும் 4 வயதில் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். ஸ்டீவன் 5 நாட்கள் மட்டும் அங்கு வேலை செய்த்தாகவும், அவருக்கு இதில், அனுபவம்  ஏதும் இல்லை … Read more