ரஞ்சி கிரிக்கெட்… மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை..!!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. … Read more

சேனல்களால் நாட்டுக்கு தர்மசங்கடம்.. ‘எடிட்டர்ஸ் கில்டு’ குற்றச்சாட்டு..!

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு முஸ்லிம் நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இரு சமூகத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். நாடு முழுதும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் … Read more

எதிர்க்கட்சி அல்ல.. ஆளும்கட்சியே இலக்கு.. அதிரடி காட்டிய அண்ணாமலை..!

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் பாஜக சார்பில் மலைவாழ் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலைவாழ் மக்கள் ஒருங்கிணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மத்திய அரசின் நிதியை பெற்று பயனடைய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். பின்னர், மலைவாழ் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், … Read more

தமிழகத்தில் தொடரும் நீர் நிலை சோகம்.. கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, நிலக்கோட்டையை சேர்ந்த கட்டட தொழிலாளி லட்சுமணன், மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்த பாபு, மதுரையை சேர்ந்த பன்னீர்செல்வம் (25) ஆகியோர் தனது குடும்பத்துடன் கைலாசப்பட்டியில் உள்ள உறவினர் தர்மராஜ் வீட்டுக்கு இன்று வந்தனர். இந்நிலையில், இன்று மாலை கைலாசப்பட்டி அருகே உள்ள பாப்பியன்பட்டி கண்மாயில் குளிப்பதற்காக பன்னீர்செல்வம், லட்சுமணன் மகன் மணிமாறன்(12), பாபு மகன் சபரிவாசன்(11) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, கண்மாயில் … Read more

பிரின்ஸ் ஆகிறார் சிவகார்த்திகேயன்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.   இந்த படத்திற்கு  ‘பிரின்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து வருகிறார்.தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இந்தப் … Read more

விண்ணப்பதாரர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கான கணினி வழித் தேர்வு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in   மற்றும் www.tnpscexams.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

திருவிழாவுக்கு வந்த இடத்தில் தகராறு.. துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி கொலை..!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (31). இவரது மனைவி நந்தினி(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று, நந்தினி தனது கணவர் மற்றும் மகள்களுடன் ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவன் – மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை குடும்பத்தினர் அருகே உள்ள கோவிலுக்கு … Read more

ஆண்கள் சோகம்.. இந்தியாவில் பெண்களே அதிக நாள்கள் வாழ்கிறார்கள் !!

இந்தியாவில் ஆண்களை விடவும், பெண்கள் அதிக காலம் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே கல்வியில் ஆண்களை பின்னுக்கு தள்ளி பெண்களே முதன்மையிடம் பிடிப்பர். அதேபோல் பல்வேறு நிலைகளில் ஆண்களைவிட பெண்களை முதன்மையாக உள்ளனர். இது வரவேற்கதக்க ஒன்றாகும். எனினும் அனைவரும் அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பதே சிறந்த போட்டியாக இருக்கும்.  இந்த நிலையில், ஆண்களை விடவும், பெண்களே இந்தியாவில் அதிக காலம் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உயிரிழக்கும் ஆண் மற்றும் பெண்களின் வயது விவரங்களை அலசி ஆராய்ந்ததில் இந்த … Read more

இதோடு நிறுத்துங்கள்.. மதுரை ஆதீனத்துக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை !!

மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து புதிய ஆதீனமாக ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வந்தபிறகு சர்ச்சைகளும், சச்சரவுகளும் அதிகரித்து வருகிறது.  நாள்தோறும் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறி வருகிறார். மேலும் மதம் தொடர்பான கருத்துகளையும் கூறி வருவதால் அவருக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அந்த வகையில், மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற … Read more

என்ஐஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு.. மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சிலருக்கு தொடர்பா?

மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக தமிழகத்தில் 9 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே கோழி கடையில் வேலை … Read more