வைரல் வீடியோ! ஸ்பைடர் மேன் போல் வீட்டிற்குள் நுழைந்த திருடன்!!

டெல்லியில் ஸ்பைடர்மேன் போல் திருடன் வீட்டிற்குள் நுழைந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஜூரி காஸ் பகுதியில் சுரேந்தர் சிங் என்பவரது வீட்டில் கடந்த 1ஆம் தேதி அதிகாலை திருடன் ஒருவன் புகுந்தான். வீட்டிற்குள் நுழைவதற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி மின்சார கம்பிகளில் தொங்கி ஸ்பைடர் மேன் போல் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அதன்பிறகு வீட்டிலிருந்த அலமாரி ஒன்றிலிருந்து தங்கச் செயின், மோதிரம், மொபைல் போன் ஆகியவற்றை திருடியுள்ளான். அப்போது திடீரென விழித்த … Read more

சொகுசு பேருந்து எரிந்து 7 பேர் உடல் கருகி பலி!!

கர்நாடகாவில் சொகுசு பேருந்து தீ பிடித்து எரிந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவாவிலிருந்து ஹைதராபாத்தை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பேருந்து கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டத்திற்குட்பட்ட கமலாபூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. விபத்தில் பேருந்து சாலையில் கவிழ்ந்து திடீரென தீ பிடித்தது. இதனால் பேருந்து உள்ளே இருந்தவர்கள் … Read more

தன்னைத் தானே திருமணம் செய்து ஹனிமூன் செல்ல உள்ள பெண்!!

இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த இளம் பெண்  ஷாமா பிந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. ஆனால் மேடையில் மணப்பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் திருமணத்திற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளுடன் ஜூன் 11ஆம் தேதி தன்னைத்தானே உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளபோகிறார். இதற்காக பத்திரிக்கை அடித்து … Read more

கே.கே. மரணம் குறித்து போலீஸார் விசாரணை – சந்தேக மரணம் என வழக்கு!!

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் இறப்பை சந்தேக மரணமாக பதிவுசெய்து காவல்துறை விசாரித்து வருகிறது. கேகே கொல்கத்தாவில் 2 கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக சென்ற நிலையில் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். அவரது மரணத்தை சந்தேக மரணமாக காவல்துறை பதிவுசெய்துள்ளது. கேகே தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளர் மற்றும் பிற பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்வரை என்னென்ன நடந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. முதல்கட்ட … Read more

வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீர் தீ!!

சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தமிழ்நாட்டில் கூட வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி அடிக்கடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்து வருவது தொடர் கதையாக மாறியுள்ளது. தற்போது நெல்லை மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது. கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் ஆசீர், … Read more

அடடே… ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் திருட்டு!!

சிவகங்கையில், ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் கடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒட்டகத்தைக் கட்டிக் கொண்டு மாட்டு வண்டி ஒன்று வந்தது. இதைப்பார்த்த போலீஸார் மாட்டு வண்டியை நிறுத்தி, அதிலிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவர் சவூதி அரேபியாவில் நீண்ட காலம் வேலைபார்த்து வந்துள்ளார். பிறகு சில மாதங்களுக்குச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து … Read more

டைம் பாஸ்-காக லாட்டரி வாங்கிய தமிழருக்கு ரூ.10 கோடி பரிசு!!

உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக திருவனந்தபுரம் சென்றபோது லாட்டரி வாங்கிய தமிழருக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. விஷூ ஆண்டு பிறப்பை முன்னிட்டு ரூபாய் 10 கோடிக்காக லாட்டரி பரிசுச்சீட்டு விற்பனை நடத்தப்பட்டது. இந்த 10 கோடி பரிசுத்தொகைக்காக 43 லட்சத்து 69 ஆயிரம் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.முதல் பரிசான 10 கோடி ரூபாய் எச்பி 727990 என்ற எண்ணுக்கு விழுந்தது. ஆனால் லாட்டரிச்சீட்டின் எண் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும்  யாரும் … Read more

சிவில் சர்வீஸ் – 7 ஆண்டுகளில் இல்லாத அளவு தமிழர்களின் தேர்ச்சி குறைவு!!

சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.  மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 685 பேரில் 27 பேர் மட்டுமே, தமிழகத்திலிருந்து தேர்வாகி இருக்கின்றனர். 2014ஆம் ஆண்டு 10 சதவிகிதமாக இருந்த தமிழக தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்தது. 2017இல் 4 சதவிகிதமாக இருந்தது. அதாவது எண்ணிக்கையில் அடிப்படையில் 42 பேர். அடுத்த ஆண்டுகளில் சற்று அதிகரித்த தேர்ச்சி எண்ணிக்கை 2020இல் … Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்றுடன் ஓய்வு!!

தமிழகத்தில் 60 வயது பூர்த்தியான ஆசிரியர்கள் உட்பட 25,000 அரசு ஊழியர்கள் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும்  வயதாக 58 இருந்து வந்தது. பின்னர் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதையடுத்து முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசின் வருவாய் குறைந்தது.  அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கொடுப்பதற்கு நிதி இல்லாத சூழல் அரசுக்கு ஏற்பட்டது. எனவே, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான வயது 58ல் இருந்து  59 ஆக கடந்த 2020 … Read more

ஸ்டாலின் கேட்டார்… மோடி கொடுத்தார்!!

தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.  தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். குறிப்பாக … Read more