முதல்வர் அலுவலகத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க..!!

 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள பெல்லோஷிப் திட்டம், ஆளுமை மற்றும் சேவை வழங்கல் செயல்முறைகளை மேம்படுத்த இளம் தொழில் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்  (டிஎன்சிஎம்ஃப்பி) 2022-24-க்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்று முதல் ஆன்லைன் வாயிலாக https://www.bim.edu/tncmpfஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஆன்லைன் விண்ணப்பத்தை வருகிற ஜூன் மாதம் 10-ம் தேதியுடன் விண்ணப்பிக்க கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் … Read more

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிநீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (மே 26) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், … Read more

அதிர்ச்சி! கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த பெண் பலி!!

கந்து வட்டி கொடுமை காரணமாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சித்ரா என்பவர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கொரோனா பரவலின் போது ரங்கநாயகி என்ற பெண்ணிடம் சிறுக சிறுக, 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். கடனை செலுத்த முடியாத காரணத்தினால் வட்டி அதிகரித்து 35 லட்சம் கட்ட சொல்லியும், வீட்டை தனது பேருக்கு எழுதி வைக்குமாறும் அந்த பெண் மிரட்டியதாக தெரிகிறது. கந்துவட்டி கொடுத்த … Read more

காவி மயமாகிறது கல்வி.. பாஜக மூத்த தலைவர் வேதனை..!

கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங், நாராயண குரு போன்றோரின் வரலாறுகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக பாடநூல் குழு தலைவர் ரோகித் சக்ர தீர்த்த, மத அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து வருகிறார். இது சரியல்ல. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அந்த பாடநூல் குழுவை ரத்து செய்ய வேண்டும். இந்த குழுவில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் இல்லை. முன்பு … Read more

ராமேஸ்வரம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை.. வடமாநில கும்பல் கைது !

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவ பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல் பாசியை சேகரித்து அதை விற்பனைசெய்து வருவதை வழக்கமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசியை … Read more

4 மாதங்களில் 6,900 பேரின் வேலை காலி.. வேட்டுவைத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் !

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டுவதிலும், அவற்றின் மதிப்பீட்டை அதிகரிப்பதிலும் தங்களது குறிப்பிடத்தக்க அடையாளத்தை பதித்து வருகின்றன. வென்ஞ்சர் இண்டெலிஜென்ஸ் அறிக்கையின் படி, 2022ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலாண்டு கணக்கில் இந்திய ஸ்டார்ட்அப்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளன.  இந்த நிலையில், பிசினஸ் இன்சைடரின் கணக்கீடுகளின்படி, இந்திய ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள்  6,900க்கும் மேற்பட்ட ஊழியர்களை விடுவித்துள்ளன.  அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி … Read more

தலையில் கல்லைப்போட்டு மாணவர் கொலை.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அரியலூரில் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது, தாத்தா – பாட்டியை பார்க்க பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம். தற்போது 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு தாத்தா – பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இரவு, வீட்டின் முன் பகுதியில் படுத்து … Read more

முதல்வர் அலுவலகத்தில் வேலை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக  அரசு வேலைவாய்ப்புகள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால், பெரும்பாலான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, முதலமைச்சர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வயது: SC/ST – 35, BC/MBC – 33 சம்பளம்: ரூ.65,000 கல்வித் தகுதி: பட்டய படிப்பு தேர்வு … Read more

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.. இன்றே கடைசி நாள் !

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மத்திய, மாநில அரசுகளே கட்டணம் செலுத்தும். இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்நிலையில், நடப்பு ஆண்டு இலவச கல்வி மாணவர் சேர்க்கைக்கான இணையவழி … Read more

அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகளில் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் உத்தரவு !

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்பப் பென்சன் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அறிவித்துள்ளது. தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மூ காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்சன் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகள் மாற்றபட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின்போது காணாமல் போனால் அவர்களின் குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்பட … Read more