அடுத்ததாக டெல்லி செல்லும் சசிகலா.. பச்சைக்கொடி காட்டிய பாஜக?

முதலமைச்சராகும் வாய்ப்பு நெருங்கி வந்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா. எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றஅவர் திரும்பி வந்தபோது ஆட்சியும் கிடைக்கவில்லை, கட்சியும் கிடைக்கவில்லை. எனினும் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்த நிலையில், தற்போது மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அண்மையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா, தான் அதிமுகவில் இணைவது … Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி.. ஆசிரியர்களுக்கு செம சலுகை !

பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு விரும்பிய மையத்திற்கு செல்லலாம் என பள்ளிக் கல்வித்துறை சலுகை அளித்துள்ளது. தமிழகத்தில் மே 5 முதல் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் தொடங்கின. விடைத்தாட்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருத்தும் மையங்களில் வைத்துள்ளனர். மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு விடைத்தாள்கள் வரும் ஜூன் 1 முதல் திருத்தும் பணி தொடங்குகிறது.  விடைத்தாளை ஆசிரியர்கள் மனஉளைச்சலின்றி திருத்த ஏதுவாக பல சலுகைகளை தேர்வுத்துறை வழங்கியுள்ளது. அதாவது, ஆசிரியர்கள் … Read more

நின்றிருந்த லாரி மீது மோதிய மினி டெம்போ.. பெண் உட்பட 4 பேர் உடல்நசுங்கி பலி !

புறவழிச்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி டெம்போ மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (38) கற்பகவல்லி (27) மிதுன் (3) லிங்கேஸ்வரன் (28) உள்ளிட்ட 7 பேர் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்திற்கு மினி டெம்போவில் டைல்ஸ் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். அப்போது சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி பயங்கரமாக மோதியது. இந்த … Read more

தொடக்கப் பள்ளியில் 18 குழந்தைகள் சுட்டுக்கொலை.. அமெரிக்காவில் கொடூரம் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.  சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் திடீரென பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக கொல்லப்பட்டனர். ஆனால், படுகாயமடைந்த மேலும் நான்கு மாணவர்கள், மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.  இதனால்  துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஆசிரியர்கள் உள்பட … Read more

புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு.. அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு.. பதற்றம் !!

ஆந்திரா மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக அம்மாநில அரசு பிரித்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர போராட்டம் … Read more

ஒரு பிளாஸ்டிக் பக்கெட் விலை 25,999 ரூபாயா?

அமேசான் இணையதளத்தில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் நிலை 25,999 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்றைய காலகட்டத்தில் கடைக்கு சென்றது அனைத்து பொருட்களையும் வாங்கி வருவார்கள். ஆனால், தற்போது இணைய தளங்கள் மூலம் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வரவழைத்து வாங்கும் வழக்கம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களில் இருந்து ஏராளமான பொருள்கள் பொதுமக்களால் வாங்கப்படுகிறது. இதன் வளர்ச்சியை பார்த்து மேலும் … Read more

விரைவில் டும் டும் டும்.. தொடக்கமாக பொங்கல் வைத்த நயன்தாரா !!

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்க தொடங்கினர். அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியீட்டு வந்தனர். சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாக நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இவர்களது … Read more

ஆசிய கோப்பை ஹாக்கியில் மோதிய இந்தியா

11ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று தொடங்கியது. வருகிற 1ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா, ‘பி’ பிரிவில் மலேசியா, 4 முறை சாம்பியனான தென்கொரியா, ஓமன், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் முதல் நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் … Read more

5 நாள் இந்த உணவை டேஸ்ட் பார்க்க 5 லட்சம் சம்பளமாம்..!!

ஆம்னி என்ற நிறுவனம் தாவர வகையிலான (சைவ) நாய் உணவை தயாரித்து வருகிறது. இந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணிக்காய் போன்ற காய்கறிகளும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழங்களும், பட்டாணி, பழுப்பு அரிசி, பருப்புகள் போன்றவையும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாய் உணவை தொடர்ந்து 5 நாள் சாப்பிட்டு அதன் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்சில் உணவின் இயக்கம், அவரது அனுபவம் குறித்த தகவல்களை ஆம்னி நிறுவனத்திடம் தகவலாக … Read more

வெள்ளத்தில் மிதக்கிறது அசாம்; கனமழையால் 25 பேர் உயிரிழப்பு..!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2,585 கிராமங்கள் வெள்ளப் பேரிடரில் சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், நகவோன் மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 97,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more