விநோத நோய் காரணமாக ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்.. உதவிகோரும் உறவினர்கள் !!

நுரையீரல் கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆக்சிஜன் கொடுக்க தினமும் ரூ.1800 செலவு ஆவதால் தமிழக அரசு உதவ கோரிக்கை எழுந்துள்ளது.   தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டிதம்பட்டு பகுதியில் சுவேதா என்ற 19 வயது இளம்பெண், தன்னுடைய பெற்றோரை இழந்து பெரியப்பா கூத்தபெருமாள் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்க முயற்சி செய்தார்.  அப்போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு … Read more

கிராமங்களில் விழுந்தது சீன ராக்கெட்டின் சிதைவுகளா?

மண்ணுலகில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நிகழ்ந்தாலும், விண்ணுலகில் நிகழும் சிறு மாற்றங்கள், ஆச்சரியங்கள் பெரியளவில் வியப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில் மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படவும் இதனால் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் தான் இந்த மாற்றங்கள் பெரியளவில் கவனிக்கப்படுகின்றன. இந்த நிலையில், குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள டாக்ஜிபுரா மற்றும் சில கிராமங்களில் சில நாட்களுக்கு முன்பு வானில் இருந்து உருண்டை வடிவ நான்கு உலோகங்கள் விழுந்தன. இந்த உலோகங்கள் 1.5 அடி விட்டம் கொண்டதாக இருந்துள்ளது. … Read more

பெண் அதிகாரிக்கு வந்த அந்தஒரு மெசேஜ்.. அடுத்த நிமிடமே ரூ.1.80 லட்சத்தை இழந்த சோகம் !

பெண் அதிகாரி ஒருவர் பான் கார்டை புதுப்பிக்குமாறு தனக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால் ரூ.1.80 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக 34 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது, கடந்த மே 9 அன்று, தனது அலுவலகத்தில் இருந்தபோது தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக் கொண்ட ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. … Read more

தாய்- தந்தை ஒன்றுசேர வேண்டும்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மகன் விபரீத முடிவு !

தாய் – தந்தை தனது இறப்பிலாவது ஒன்று சேர வேண்டுமென பள்ளி மாணவன் கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மேகலா. இத்தம்பதியின் மகன் தருண்  அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக ரவி மற்றும் மேகலா தம்பதியினர் பிரிந்து … Read more

வன்முறை அதிகரிப்புக்கு ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம்.. பகீர் குற்றச்சாட்டு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த வன்முறைக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தான் காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1990ஆம் ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.  இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளதாக வலதுசாரி அமைப்புகள் பாராட்டுத் தெரிவித்தன. மத்திய ஆளும் கட்சியும் வரவேற்பு தெரிவித்தது. அதேவேளையில், வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் உள்ளதாகவும் … Read more

கடன்களுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்வு.. இஎம்ஐ தொகை உயர்வதால் அதிர்ச்சி !!

வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் உயர்த்தியுள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கடந்த 30 நாட்களில்  2ஆவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தியுள்ளது.  அதன்படி கடந்த ஓர் ஆண்டிற்கான … Read more

இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை- பெரும் பதற்றம்.. தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு !!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்ஜீத் சிங் (42), ரஞ்ஜீத் சிங் (38) ஆகிய இருவரும் அப்பகுதியில் கடைகள் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் ர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கொலை நடந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்லாமிய தேச கோரசான் பிரிவு என்ற … Read more

செம வாய்ப்பு.. அஞ்சல் துறையில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் !!

இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை வங்கியில்(ஐபிபிபி) காலியாக உள்ள 650 எக்ஸிகியூட்டிவ் பணியிங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விளம்பர எண். IPPB/HR/CO?REC/2022-23/01 பணி: Executive காலியிடங்கள்: 650 சம்பளம்: மாதம் ரூ.30,000 வயதுவரம்பு: 30.04.2022 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 30.04.1987 – 30.04.2002 ஆம் ஆண்டுக்குள் பிறந்திருக்க வேண்டும்.  தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் … Read more

பருவமழை தொடங்கிவிட்டது.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

இந்தியாவுக்கு பெரும் நீர் ஆதாரம் தரும் மழை என்றால் அது தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. இந்தியாவின் விவசாய பயன்பாட்டுக்கு இந்த பருவமழையே முக்கிய காரணியாக உள்ளது. ஏனெனில் கேரளா தொடங்கி பல மாநிலங்களில் இந்த மழை பொழிந்து வருகிறது. நாடு முழுவதும் நடப்பாண்டு மிகக்கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தென்மேற்கு பருவமழையை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.   இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் … Read more

மனைவியால் ஏற்பட்ட கடனை அடைக்க கணவர் செய்த பகீர் செயல்.. போலீசார் அதிர்ச்சி !!

ஓஎல்எக்ஸ் (OLX) தளத்தில் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்ட கார் ஒன்றை டெஸ்ட் டிரைவ் முறையில் ஓருவர் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓஎல்எக்ஸ் இணைய தளம் மூலம் வாகனங்கள் முதல் அனைத்தும் வாங்கலாம், விற்கலாம். அந்தத் தளத்தில், பெங்களூரைச் சேர்ந்த ரவீந்திரா எல்லூரி என்பவர் தன்னிடம் உள்ள காரை விற்பனை செய்யும் நோக்கில் விளம்பரம் செய்துள்ளார். அதற்கு சுமார் ஐந்து பேர் பதில் கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் தான் எம்.ஜி.வெங்கடேஷ் நாயக். ஆனால், அவர் குறித்த எந்த விவரமும் … Read more