சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. விறகாக மாறும் விசைப்படகுகள்..!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்ட  விசைப்படகுகள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் 200-க்கும் அதிகமான விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் விசைப் படகுகள் ஏலம் விடப்பட்டது. அதில் 130-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தால், பழுது பார்க்க முடியாத நிலையில் … Read more

இலங்கை வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு..!!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்களே காரணம் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜபக்சே பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தொடர் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். இதற்கிடையே இலங்கையில் தொடரும் இலங்கையில் பிரதமர் ராஜபக்சே ராஜினிமா … Read more

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது.. அமைச்சர் பதில் !

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை அளிக்கப்படுமா என்பதற்கு பஅமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்படுமா? என்று கேட்கிறீர்கள்.  ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் 4, … Read more

மெட்ரோ ரயிலில் பயணம்.. ஏப்ரல் மாதத்தில் திணறவைத்த பயணிகள் !

சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் தான் அதிகபட்ச பேர் பயணம் செய்துள்ளனா். மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இதன்காரணமாக, 2022 ஜனவரி மாதம் 25,19,252 பேரும், பிப்ரவரி மாதம் 31,86,653 பேரும், மார்ச் மாதம் 44,67,756 பேரும், ஏப்ரல் மாதம் 44,46,330 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஏப்ரல் 25ம் தேதி 1,74,475 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.  … Read more

முதல்நாளே இப்படியா? – பங்கில் சுறுசுறுப்பாக வேலை பார்த்து மாலை பணத்துடன் ஓட்டம் !

சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. பிரதான இடம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டிசல் நிரப்பிச்செல்வது உண்டு. இந்த நிலையில், இங்கு எரிபொருள் நிரப்பும் பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது.  இதை பார்த்த செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மாரியப்பன் (33) என்பவர், கடந்த 21ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். அப்போது, வீட்டின் முகவரி உள்ளிட்ட … Read more

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது.. இயக்குநர் இவர் தான் !

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்க உள்ளதாக நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் வெங்கட் மெட்டி ஒலி தொடரில்  போஸ் என்ற கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதனையடுத்து இவரது பெயர் போஸ் வெங்கட் என பரவலாக அறியப்படுகிறது. திமுக தலைமை கழக பேச்சாளராகவும் இவர் உள்ளார்.  கன்னி மாடம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட். இவர் அடுத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை … Read more

டெல்லி அணியின் கீப்பருக்கும் கொரோனா.. போட்டி நடப்பதில் சந்தேகம் !!

டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்து அனைத்து அணிகளும் இரண்டாவது சுற்றில் விளையாட தயாராகி வருகின்றனர். கொரோனா காரணமாக மும்பை, நவி மும்பை, புனே ஆகிய மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  எனினும், … Read more

தீவிரமாகும் கொடநாடு வழக்கு.. இந்த முறை சிக்கியிருப்பது சசிகலா !!

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட், பங்களா உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவு கோடநாடு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். பல தீர்க்கமான முடிவுகளை அவர் அங்கிருந்துதான் எடுத்துள்ளார் என்றும் தற்போது வரை கூறப்படுகிறது. அந்த இடத்துக்கு எப்போதும் மவுசு அதிகம். ஆனால், அவர் உயிரிழந்த பிறகு அந்த எஸ்டேடும், பங்களாவும் மர்ம பகுதிகளாக இப்போது மாறியுள்ளது. அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் காவலாளி கொலை … Read more

பதவி விலகுகிறார் இலங்கை அதிபர்.. மக்கள் எழுச்சிக்கு பணிந்தார் ராஜபட்ச !!

தான் பதவி விலகத் தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இலங்கை தமிழ் மக்கள் பலரும் படகு மூலம் தமிழகம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.  இதனிடையே, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் வீதியில் இறங்கி … Read more

பெரும் சோகம்.. பட்டாசு வெடித்து சிதறியதில் இளைஞர் உயிரிழப்பு !!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் தங்க பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று வழக்கம்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். காலையில் இருந்தே தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், பகல் 12 மணிக்கு எதிர்பாராத வகையில் அந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட ஒரு அறையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது.   பட்டாசு வெடித்து சிதறியதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. அதில் அமர்ந்து … Read more