அச்சச்சோ.. கொரோனாவின் புதிய திரிபு ஒமைக்ரான் XE இந்தியாவில் பரவியது !!

மிக வேகமாக பரவும் கொரோனாவின் புதிய திரிபு ஒமைக்ரான் XE இந்தியாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ (XE) எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, பத்து சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எக்ஸ் இ திரிபின் புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு … Read more

பிரபல நடிகையுடன் வெங்கடேஷ் ஐயர் காதல்?

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக ஆடி வருபவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 27 வயதான இவர் ரஞ்சியில் மத்தியபிரதேச அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் ஜொலித்த அவர் இந்தியஅணியிலும் வாய்ப்பை பெற்றார். தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.  ஆனால் இந்த சீசனில் இதுவரை நடந்த 3 போட்டியிலும்  16, 10,3 என ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் பிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கி … Read more

பொட்டு வைத்த விரிவுரையாளர் மீது தாக்குதல்.. காவலர் கைது..!

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேஜ்கோன் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர் லோதா சுமந்தீர். இந்து மதத்தைச் சேர்ந்தவரான இவர் எப்போதும் நெற்றியில் பொட்டு வைத்து கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கல்லூரி முடிந்து வெளியே வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த காவலர் நஸ்முல் தரீக், லோதாவை பார்த்து பொட்டை எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு லோதா மறுத்ததால், அவரை மோசமான வார்த்தைகளால் … Read more

#BREAKING:- குட் நியூஸ்.. விரைவில் தனி தாலுகா, 3 லட்சம் பட்டா: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18-ம் தேதி 2022 – 2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (6-ம் தேதி) மீண்டும் கூடியது. இதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கேள்வி நேரமும் எடுத்துக் … Read more

பரபரப்பு.. விமான பயணி உயிரிழப்பு..!

சென்னை விமான நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உக்கி தேவி என்ற 84 வயது பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். விமான நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதித்ததில், உக்கி தேவி மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. விமான நிலையத்தில் பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Source link

மாணவர்களுக்கு பாதிப்பில்லை.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று காலை துவங்கியது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் இயக்கப்படும் 15, 335 பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுபோல் சென்னையில் 3,175ல் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. போதிய அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன், … Read more

பக்தர்களே.. ஏப்ரல் 10-ம் தேதி முதல் இதன் விலை உயர்கிறது..!

சபரிமலை ஐயப்பன் கோவில் பூஜை மற்றும் பிரசாதங்களின் கட்டணங்கள் விலை உயர்த்தப்படுவதாகவும், இந்த புதிய விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து சென்று, ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள், அங்குள்ள பிரசாதங்களான அரவணை பாயசம், அப்பம், நெய், விபூதி, குங்குமம் போன்றவற்றை வாங்கி வந்து தங்களது குடும்பத்தினர் மற்றும் … Read more

மக்களே உஷார்.. பகுதி நேர வேலை.. நூதன முறையில் மோசடி..!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆரம்ப கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த புயல்ராஜ் மகன் சிவக்குமார் (25). இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது, விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், சிவக்குமாரின் நண்பர் முரளிதரன் என்பவருக்கு, ‘ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்ப்பதன் மூலம் ரூ.500 முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப்பார்த்த முரளிதரன், அதை தனது நண்பர் சிவக்குமாருக்கு அனுப்பி உள்ளார். வெளிநாடு செல்லலாமா..? … Read more

வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரசை ஓரங்கட்டிவிட்டு ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவி ஏற்றார். அவரது தலைமையில் 10 பேர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநிலத்தில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு உதவி எண்ணை அறிவித்தார். இதன்மூலம், பொதுமக்கள் புகார் மற்றும் வீடியோ அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் … Read more

97 லட்ச ரூபாய் மோசடி செய்த பிரபல நடிகரின் சகோதரர்!!

நிலம் வாங்கி தருவதாக கூறி  97 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிரிதரன் என்பவரிடம் மதுக்கரை அருகே 4.52  ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறி கேரளாவை சேர்ந்த சுனில்கோபி கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  அணுகியுள்ளார். நிலம் பிடித்து போகவே முன்பணமாக 97 லட்ச ரூபாய் பணத்தை சுனில்கோபி நண்பர்கள் சிவதாஸ் மற்றும் ரீனா ஆகியோரது வங்கி கணக்குகளில் 97 லட்ச … Read more