கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்த மகேஸ்வரி என்பவரை சுமார் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த பொழுதும் அவருடைய கூட்டாளிகள் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் கோயில் திருவிழாவின் போது சாராய கும்பல் மற்றும் இளைஞர்கள் இடைய மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. மோதல் காரணமாக இளைஞர்கள் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில்  சாராய வியாபாரியின் அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அப்பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கை, … Read more

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம் – முதல்வர் விளக்கம்!!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என்பதால் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றப்பட்டது குறித்து அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் … Read more

டெல்லியில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண்கள் கைது ..!!

கிழக்கு டெல்லியின் பாண்டவா நகரில் சர்வதேச அளவிலான விபசார தொழில் நடைபெற்று வருகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து சஷி கார்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஓட்டல் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்காக போலியாக, ஒருவரை வாடிக்கையாளர் போன்று ஓட்டலுக்கு உள்ளே அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பெண்கள் சிக்கினர். இதேபோன்று, பிரவீன் குமார் மற்றும் … Read more

பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்க இத்தனை லட்சம் செலவு செய்யப்பட்டதா !!

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23 ). மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட பாபு, கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறும்போது, கால் தவறி கீழே விழுந்தார். எனினும் நல்வாய்ப்பாக செங்குத்தான பாறை ஒன்றின் இடையே சிக்கி கொண்டார். அங்கிருந்தபடி தன்னை மீட்கும்படி வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினார். அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பாபுவை மீட்க முயன்றனர். … Read more

சென்னையில் பல்லி பிரியாணி.. ஆர்டர் செய்து சாப்பிட்ட அப்பாஸ் ஆஸ்பத்திரியில் அட்மிட்..!

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், “ஒரு வேலையாக புரசைவாக்கம் வந்தேன். மதியம், அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். … Read more

ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு எடுத்து பஞ்சாப் அணி..!

15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் … Read more

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!!

திருவள்ளூர் அருகே தொண்டையில் தேங்காய் சிக்கியதால் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவரின் மூன்று வயது குழந்தை சஞ்சீஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, சமைப்பதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டு ஒன்றை எடுத்து குழந்தை சாப்பிட்டபோது அது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை … Read more

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி!!

தமிழகத்தில் திரையரங்குகள், உணவகங்கள் நூறு சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா ஊரடங்கு உத்தரவு வரும் 15ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் தளர்வுடன் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நர்சரி, மழலையர் … Read more

செல்போன் செயலிகள் மூலம் லோன் வாங்க வேண்டாம்- காவல்துறை எச்சரிக்கை !

அவசர தேவைக்காக கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகள் மூலம் லோன் பெற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் அலைபேசி செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்யும் மோசடி கும்பல் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அதுபோன்ற செயலிகளை, ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ப்ளே ஸ்டோர் மற்றும் இணையத்தளங்களில் அதேபோன்ற கடன் … Read more

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

பொன்னேரி அருகே தேங்காய் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் வசந்த். இவரது இளைய மகன் மூன்றரை வயதான மகன் சஞ்சீஸ்வரன். இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் கவனிக்காத நேரத்தில் வீட்டிலிருந்த தேங்காயை சஞ்சீஸ்வரன் சாப்பிட்டுள்ளார். அப்போது, தேங்காய் துண்டொன்று சிறுவனின் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால், சிறுவனுக்கு மூச்சுத்திணறியது. மேலும் சிறுவன் மூச்சு திணறி துடிப்பதை கண்டு உறவினர்கள் பழவேற்காடு … Read more