#BIG NEWS : நாடு முழுவதும் இன்று ஆதிவாசிகள் போராட்டம்..!!

அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதாக எடுக்கப்பட்டுள்ள சர்வாதிகார முடிவு ஆதிவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டின் முதல் பெண்மணியான ஆதிவாசி ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஓரங்கட்டும் செயல் ஆகும். இது இந்திய ஜனநாயகத்துக்கும், ஒட்டுமொத்த ஆதிவாசி சமூகத்துக்கும் நேரடி அவமதிப்பாகும்’ என குற்றம் சாட்டினார். மோடி அரசு இவ்வாறு தொடர்ந்து அரசியல்சாசனத்தை மீறிவருவதை கண்டித்து 26-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் மாநிலம், மாவட்டம், … Read more

நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை..!!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திமுக ஆட்சியின் தொடர் தோல்விகளை மறைக்க, நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு ஆண்டு காலமாக, திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு நிறுவனங்களைப் புறக்கணித்து வரும் திமுக, தற்போது ஆரம்பித்திருக்கும் புதிய நாடகம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதப்பட்ட கடிதமும் ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறையும். அரசு … Read more

நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 79 நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவர். அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவர். எனவே இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரண் எனக் குற்றஞ்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. Mockery of Democracy … Read more

மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்!!

மறைந்த மனைவியின் நினைவாக தொழிலதிபர் ஒருவர் சிலை வைத்து நினைவு தினத்தை அனுசரித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த நாராயணன் (70) என்ற தொழிலதிபரின் மனைவி ஈஸ்வரி 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். இந்த சூழலில் மனைவிக்கு அவர் சிலை செய்ய நினைத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிலிக்கான் … Read more

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோலின் சிலிர்ப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்..!!

விரைவில் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலுக்கும் சோழர்கால ஆட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதற்கு சோழா செங்கோல் என்று பெயரிட்டு அழைத்தாலும், அது பொந்தவே பொருந்தாது. கடந்த 24-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்படவுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து செங்கோல் என்ற இந்த சொல்லும், வரலாறும் மற்றும் அதனுடன் சேர்ந்த தமிழ் மரபும் தேசியளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் செல்லும் போது, அவர்கள் … Read more

ஹோட்டல் அறையில் இறந்துகிடந்த திரைப்பட இயக்குநர்!!

பிரபல திரைப்பட இயக்குநர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஜ்புரி திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான. சுபாஷ் சந்திர திவாரி, படங்கள், குறும்படங்கள் இயக்கியுள்ளார். இவர் இயக்கி வரும் படத்திற்காக உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு சோனபத்ரா என்ற இடத்தில் ஹோட்டல் ஒன்றில் படக்குழுவுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று அறைக்கு சென்ற அவர், பின்னர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. பதற்றமடைந்த படக்குழுவினர் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து … Read more

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு!!

பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் 28ஆம் தேதி ஒரு நாள் மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது. … Read more

டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

நாடு முழுவதும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ள செங்கோல் பற்றியும், அதனை வடிவமைத்தது யார், அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். மே 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்பட உள்ள நிலையில், அதைத்தாண்டி தற்போது செங்கோல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது ஆட்சி செய்பவர்கள் காலம்காலமாக கையில் வைத்திருப்பது. தமிழில் உள்ள செம்மை என்ற வார்த்தையில் இருந்து செங்கோல் உருவாகியுள்ளது. செம்மை என்றால் சிறப்பு என்று பொருள். செம்மையான கோலை வைத்து அல்லது … Read more

ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாகக் கூறும் தகவல் பொய்..!!

அமுல் நிறுவனத்தின் தமிழக ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாகக் கூறும் தகவல் பொய்யானது. விவசாயிகளின் பாதிப்பைத் தடுக்கவே அமுல் செயல்படும்; ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது. தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது; 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. பால் கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்கிறோம். … Read more

தனது பாடல்களில் கிறிஸ்துவ மதத்தை பரப்பினாரா ஹாரிஸ் ஜெயராஜ்..? அதுவும் முதல்வன் படத்தில் ?

தான் இசை அமைத்த பாடல்களில் கிறிஸ்துவத்தை மறைமுகமாக புகுத்தியதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மீது தற்பொழுது புதிதாக குற்றச்சாட்டு ஒன்று எழுதி இருக்கிறது. இந்த ஒரு குற்றச்சாட்டு தான் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாகவும் மாறி இருக்கிறது. சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் 1987ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் … Read more