\"இஸ்ரேலுக்கு உதவினால் விளைவுகள் மோசமாக இருக்கும்!\" ஈரான் வார்னிங்! உடனே அமெரிக்காவுக்கு பறந்த மெசேஜ்

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு உதவினால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் Source Link

இரும்பு கம்பிகள் + 20 அடி சிறை சுவர்.. வெறும் போர்வை தான்.. மின்னலாக தப்பி அதிர வைத்த கைதிகள்

குவஹாத்தி: போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை கைதிகள் ஐந்து பேர், அஸ்ஸாமில் உள்ள சிறையில் இருந்த கம்பியை உடைத்து, பெட்ஷீட்கள், போர்வைகள் மற்றும் லுங்கிகளை மட்டுமே பயன்படுத்தி 20 அடி சுவரை லாவகமாக தாண்டி தப்பியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை இந்த சம்பவத்தை சிறை கைதிகள் திட்டமிட்டு நடத்தியிருப்பதாக Source Link

பிட்காயின் தான் அடுத்த தங்கமா? இப்போது முதலீடு செய்யலாமா! நாலே வார்த்தையில் ஆனந்த் சீனிவாசன் நறுக்

சென்னை: இப்போது ஒரு சிலர் பிட்காயின் தான் அடுத்த தங்கம் என்று சொல்லி முதலீடு செய்து வருகிறார்கள். வரும் காலத்தில் இந்த பிட்காயினில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அவர்கள் இதைச் செய்து வருகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை.. பிட்காயினில் எப்போது முதலீடு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் Source Link

கல்லெறிந்த ஹிஸ்புல்லா.. இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்..யாரிந்த வஃபிக்?

பெய்ரூட்: காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழு மீது உக்கிரமான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 117 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த Source Link

குப்புறப்படுத்த நிலையில் பெண் ஆசிரியருக்கு மசாஜ்.. ராஜஸ்தான் அரசுப் பள்ளி அவலம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், அரசுப்பள்ளி வகுப்பறையில் ஒரு பெண் ஆசிரியர் குப்புறபடுத்த நிலையில் படுத்திருக்கிறார். அவரின் கால் பகுதிக்கு மாணவர் ஒருவர் மசாஜ் செய்கிறார். இதை அங்கிருந்த மற்றொரு ஆசிரியரும், மாணவர்களும் வேடிக்கை பார்த்தனர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   பள்ளி கூடங்கள் அதிக சர்ச்சைகள் நடக்கும் இடமாக மாறிவிட்டது. ஒருபக்கம்  மாணவிகளுக்கு எதிரான Source Link

துர்கா பூஜையா.. பேஷன் ஷோவா.. அரைகுறை ஆடையுடன் போட்டோ எடுத்த மாடல்கள்.. கொந்தளிக்கும் கொல்கத்தா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில பெண் மாடல்கள் அரைகுறை ஆடையுடன் துர்கா சிலை முன்பு எடுத்த போட்டோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோயிலுக்கு இப்படித்தான் வருவீங்களா என இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்துக்கள் துர்கா பூஜையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதுவும் கொல்கத்தா மாநிலத்தில் துர்கா Source Link

அமைதிக்கான நோபல் பரிசு.. ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்பிற்கு அறிவிப்பு

நார்வே: பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் கூட எப்போதும் அமைதிக்கான நோபல் பரிசு மீது தான் பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அமைக்க முயற்சிகளை எடுத்து வரும் ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து Source Link

வங்கதேசத்தில் காளி கோவிலுக்கு மோடி அளித்த கிரீடம் திருட்டு.. இந்தியா கொடுத்த ரியாக்‌ஷன்

டாக்கா: வங்கதேசத்தின் சதகிரா நகரில் உள்ள ஜசோரேஸ்வரி கோவிலுக்கு பிரதமர்  மோடி தானமாக அளித்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் திருடு போயுள்ளது. இது குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்ப்டுத்தியுள்ளதோடு  திருடப்பட்ட கிரீடத்தை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்தை வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான குஜராத்தின் ஐஸ்வரிபுர் பகுதியில் Source Link

'டாப்' போட்டது ஒரு குத்தமா?.. துணியால் வந்த வம்பு.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண்கள்

அமெரிக்கா: அசாதாரண சூழ்நிலைகளின்போது விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விடப்படுவது வழக்கம். ஆனால், கிராப் டாப்ஸ் போட்டதற்காக விமானத்தில் இருந்து இரண்டு இளம்பெண்கள் இறக்கி விடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. விமானத்தில் ஏற்படும் வசதி குறைபாடுகள் குறித்த செய்திகள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், சிறுநீர் கழிக்கும் விவகாரம், Source Link

ஹரியானா தோல்வியால் அதிருப்தி? உ.பி.யில் காங்கிரஸை கழட்டிவிட போகிறதா சமாஜ்வாடி.. அகிலேஷ் யாதவ் பதில்

லக்னோ: ஹரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்ததால் அக்கட்சியின் மீது சமாஜ்வாடி அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இதுபற்றி செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தார். Source Link