காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்! சொந்த குடும்பத்தில் உள்ள 13 பேரையும் கொன்ற சிறுமி- அதிர வைக்கும் சம்பவம்

இஸ்லாமாபாத்: 18 வயது கூட ஆகாத சிறுமி ஒருவர் தனது காதலைப் பெற்றோர் சம்மதிக்காததால் அவர்களைக் கொலை செய்துள்ளார். அந்த பெண் கோதுமையில் விஷம் கலந்த நிலையில், அதைச் சாப்பிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை எனச் சொல்வார்கள். ஆனால், சில சம்பவங்களைப் Source Link

அக்கவுண்ட் திறந்த ஆம்ஆத்மி.. காஷ்மீரில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி கெஜ்ரிவாலின் சிஷ்யன் அசத்தல் வெற்றி

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஆம்ஆத்மி அக்கவுண்ட்டை திறந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சிசீயன் மேக்ராஜ் மாலிக் தோதா தொகுதியின் ஆம்ஆத்மி வேட்பாளராக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை வீழ்த்தி வாகை சூடியுள்ளார். இதன்மூலம் ஆம்ஆத்மி 5வது மாநிலத்துக்குள் நுழைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் Source Link

அப்படியே பலிச்சிட்டே.. காஷ்மீர் தேர்தல் முடிவை சரியாக கணித்த இந்தியா டுடே – சி வோட்டர்! இதை பாருங்க

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இன்று ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே இந்தியா டுடே – சி வோட்டர் கணித்த எக்ஸிட் போல் அப்படியே பலித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 Source Link

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் செம்ம ட்விஸ்ட்.. பாஜக, காங்கிரஸ் மாநில தலைவர்கள் தோல்வி முகம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 26 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவ்ர் தாராசந்த் இருவருமே தங்களது Source Link

திமுக-அதிமுக மாதிரி எதிரேயுள்ள தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள், கூட்டணி வைக்கப்போகிறதா?

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தொங்கு சட்டசபை அமையலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் தந்தை மகனான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மாற்றுக் கருத்துகளை தெரிவித்துள்ளனர். Source Link

ஓமர் அப்துல்லா முதல் மெகபூபா முப்தியின் மகள் வரை.. ஜம்மு காஷ்மீரின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் அங்கு போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா முதல் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி வரை முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? அவர்களின் நிலை என்ன? என்பது இங்கு பார்க்கலாம். கடந்த 2014 சட்டசபை தேர்தலுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து Source Link

ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை.. மும்முனையில் வெல்லப்போவது யார்? பெரும் எதிர்பார்ப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மெகபூபா முப்தியின் Source Link

எம்எல்ஏக்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம்.. ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சிகள் கொதிப்பு- பின்னணி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஐந்து எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தொங்கு சட்ட சபை அமைந்தால், ஆளுநர் நியமிக்கும் எம்.எல்.ஏக்களின் பங்கு முக்கியத்துவம் பெறும் என்பதால், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் Source Link

வேலையை காட்டும் மொசாத்.. ஸ்மார்ட் உளவாளிகளை களமிறக்கிய இஸ்ரேல்.. ஈரானின் பிரம்மாஸ்திரத்திற்கு குறி

டெஹ்ரான்: ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் Source Link

ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏன் வைக்க கூடாது? ட்விஸ்ட் வைத்து பேசிய பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: பாஜகவை வீழ்த்துவதற்காக மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு தயார் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தொங்கு சட்டசபை அமைந்தால் மெகபூபா முப்தியுடன் இணைந்து ஆட்சியை பிடிக்கவும் இந்தியா கூட்டணி வியூகம் வகுப்பதாக தெரிகிறது. ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு Source Link